கொரோனா பாதிப்பு முடிவடைய நீண்ட காலம் ஆகும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

டெட்ராஸ் அதானோம்

கொரோனா தொற்று முடிவடைவதற்கு நீண்ட காலமாக என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உலகையை முடக்கிய கொரோனா வைரஸை தற்போது வரை முடக்கிய முடியாமல் அறிவியல் உலகமும், மருத்துவ உலகமும் திணறி வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போதுதான் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. முதல் அலையை விட தற்போது கொரோனா பரவும் வேகம் அதிகமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனோம், ‘கொரோனா தொடர்பாக குழப்பதுடனும் மனநிறைவுடனும் பேசுகிறோம் என்றால் கொரோனா பாதிப்பு முடிவடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால், நிரூபிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரலாம். சமூகமும், பொருளாதாரமும், பயணமும்,, வர்த்தகமும் மீண்டும் தொடங்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்.

  ஆனால், பல நாடுகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தற்போது நிரம்பி வழிகின்றன. மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்படக் கூடியது. கொரோனா பாதிப்பு நிறைவடைவதற்கு நீண்ட காலம் ஆகும். ஆனால், பல காரணங்களால் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்ததது, இந்த கொரோனா வைரஸ் மற்றும் திரிபு வைரஸை தடுத்து நிறுத்தலாம் என்பதைக் காட்டுகிறது. நாம் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

  தொடர்ந்து ஏழாவது வாரமாக அதிகரித்துவருகிறது. இறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவும் வேகத்தை அளவிடும் பாதையைப் பார்க்கும்போது பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சில நாடுகளில் உணவகங்கள், இரவு கேளிக்கை விடுதிகள், சந்தைகள் மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கிறது. கூட்டத்தில் சிலர் மட்டும்தான் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சிலர் இளமையாக இருப்பதால் கொரோனா பாதிப்பதை பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர். ஆனால், கொரோனாவுக்கு அது ஒரு விஷயமல்ல’ என்று தெரிவித்தார்.
  \

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: