ஹோம் /நியூஸ் /உலகம் /

'ஒமைக்ரான் சாதாரணமானது அல்ல; உயிர்களை கொல்லக் கூடியது' : புதிய எச்சரிக்கை வெளியிட்ட WHO

'ஒமைக்ரான் சாதாரணமானது அல்ல; உயிர்களை கொல்லக் கூடியது' : புதிய எச்சரிக்கை வெளியிட்ட WHO

ஒமைக்ரான் வைரஸை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது உயிர்களை கொல்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஒமைக்ரான் வைரஸை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது உயிர்களை கொல்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஒமைக்ரான் வைரஸை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது உயிர்களை கொல்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒமைக்ரான் குறித்த புதிய எச்சரிக்கை பதிவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வகையான வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பரவலாக பேசப்படும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கொரோனா, பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த வைரஸ், விறுவிறுவென வேகமாக உலக நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா சீனாவில் தொடக்கம்!

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் மற்ற வேரியண்ட்டுகள் உடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் கூறியிருந்தனர். இருப்பினும் இதன் பரவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இதையும் படிங்க :  பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகையலங்காரம் செய்த பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் - அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ’ஓமைக்ரான் வைரஸை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது உயிர்களை கொல்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்கையில் இந்த வைரஸை நாம் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் நம்மை வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. எனவே மக்கள் சுய கட்டுப்பாடுடன் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனை செய்தால் மட்டுமே, நாம் இந்த பெருந்தொற்றில் இருந்து விடுபட முடியும்.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Also Read: உலகம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது: WHO அதிர்ச்சி தகவல்

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், ஆசிய நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் டெல்டா வேரியண்ட் இரண்டாவது அலையை உருவாக்கிய நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தற்போது மூன்றாம் நிலையை அலையை உருவாக்கி உள்ளது. இது என்ன மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

First published:

Tags: Omicron