• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 24 விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பு - WHO அதிர்ச்சி ரிப்போர்ட்

24 விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பு - WHO அதிர்ச்சி ரிப்போர்ட்

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஒவ்வொரு நாட்டிலும் விபத்துகளைக் குறைக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என WHO கோரிக்கை வைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகளவில் ஒவ்வொரு 24 விநாடிகளிலும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார் என்றும் இதற்கு உடனடியாக சர்வதேச நடவடிக்கை வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கோரிக்கை வைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ’சாலை விபத்துகளால் மட்டும் உலகளவில் 1.35 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு லட்சமாக அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் WHO வருத்தம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சாலை விபத்துகளில் அதிகமாக 5 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டோரே உயிரிழப்பதாகவும் அந்த அறிக்கை விளக்குகிறது. இதுகுறித்து WHO தலைவர் டேட்ரோஸ் அந்தானோம் கூறுகையில், “இந்த மரணங்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன. சர்வதேச அளவில் விபத்துகளைத் தடுப்பதற்குத் தகுந்த தீர்வுகள் இருக்கின்றன. தீர்வுகளை செயல்படுத்தாமல் இருப்பதால் பயனில்லை” எனக் கூறியுள்ளார்.

பணக்கார நாடுகள் பலவும் சாலைப் பாதுகாப்பு குறித்துத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. சட்ட விதிமுறைகளை செயல்படுத்துதல், வேகக் கட்டுப்பாடு, ஹெல்மெட் அணிய உத்தரவிடுவது என பல விதிமுறைகள் பணக்கார நாடுகளில் பின்பற்றப்படுவதாகவும் WHO அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் பார்க்க: 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: