உலக சுகாதார அமைப்பில் பாலியல் குற்றங்கள் அம்பலம்: விசாரணை நடத்த கோரிக்கை

உலகச் சுகாதார அமைப்பு (WHO)

உலகச் சுகாதார அமைப்பில் பாலியல் குற்றங்கள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது, இதனையடுத்து விசாரணை நடத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

 • Share this:
  ஆப்ரிக்காவைச் சேர்ந்த காங்கோவில், 2018ல் 'எபோலா' வைரஸ் பரவியது. இது தொடர்பாக அங்கு சென்ற, உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த, டாக்டர் ஜீன் பால் நகண்டு என்பவர், ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து, ரகசியம் வெளியில் தெரியாமல் இருக்க பெருந்தொகை கொடுத்துள்ளார்.

  இதுதவிர பிரசவ செலவிற்கு தனியாகவும், காங்கோவில் ஒரு நிலம் வாங்கவும் பணம் தந்துள்ளார்.

  இது தொடர்பான ஒப்பந்த நகலை, 'அசோசியேடட் பிரஸ்' நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த பொபாகர் டையலோ என்ற டாக்டர், மூன்று பெண்களை பாலுறவுக்கு அழைத்த தகவலும் வெளியாகியுள்ளது.

  'எங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்து, அதற்கு கைமாறாக, பொபாகர் டையலோ பாலுறவுக்கு அழைத்தார்' என, அந்த பெண்கள் பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளனர்.இத்தகைய பாலியல்குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்த, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனம் கெப்ரியேசஸ், ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே உலகசுகாதார நிறுவனத்தில் நடந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, அந்நிறுவனத்திற்கு பெருமளவு நிதியுதவி செய்யும் நாடுகளும், தொண்டு நிறுவனங்களும் கவலை தெரிவித்து உள்ளன.இந்த குற்றச்சாட்டுகள்குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, அவை கோரியுள்ளன.

  ஜனவரி 2019-ல் ஷெகினா என்ற பெண் காங்கோவில் எபோலா வைரஸ் காலத்தில் நர்ஸாக பணியாற்றியுள்ளார். அப்போது உலகச் சுகாதார அமைப்பின் மருத்துவர் பொபாகர் டையலோ அந்தப் பெண்ணை தன்னுடன் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். “அவர் என்னை அழைத்தார், எனக்கு அப்போது இருந்த நிதி நெருக்கடியில் நான் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன்” என்று கூறுகிறார் ஷெகினா.

  தனக்கும் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸுக்கு தனக்கும் உள்ள நெருங்கிய நட்பைப் பற்றி அடிக்கடி இந்த டாக்டர் டையலோ பீற்றிக்கொள்வதுண்டாம். தன் உடலை அடமானம் வைத்த ஷெகினா அதன் மூலம் தன் நண்பர்களுக்கும் வேலை வாங்கித்தந்துள்ளார்.

  இரண்டு மருத்துவர்கள் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர், ஒன்று டையலோ, மற்றொருவர் நகாண்டு. இது தொடர்பாக இருவரையும் அசோசியேட் பிரஸ் தொடர்பு கொண்ட போது இருவருமே வழக்கம் போல் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

  ஹூ அமைப்பில் பாலியல் குற்றங்கள் நடப்பதை அதன் 8 மூத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஏற்கெனவே கோவிட்-19 அல்லது கொரோனா பரவலுக்கு உலகச் சுகாதார அமைப்பின் பாரபட்சமான போக்கும் கையாலாகாத்தனமும் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்ப அதோடு பாலியல் குற்றச்சாட்டுகளும் தற்போது சேர்ந்துள்ளன.
  Published by:Muthukumar
  First published: