வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 20ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இப்போட்டிகள் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
2022 உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தார் வருகை தந்துள்ளனர். அதேபோல், கத்தார் நாட்டிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே, கத்தாரில் சுமார் 40 லட்சம் மக்கள் திரண்டிருக்கும் இந்த வேளையில், உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நடைபெறும் பிரதான சர்வதேச நிகழ்வு இதுவாகும். பொதுவாக மத்திய கிழக்கு நாடுகள் பாலைவனம் சார்ந்த பகுதிகள் என்பதால் அங்கு ஒட்டகக் காய்ச்சல் பரவல் காணப்படுவது இயல்பு. ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டு முதல் முதலில் பதிவான இந்த மெர்ஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.அதேபோல், 935 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, மெர்ஸ் தொற்றும் உலகப் பெருந்தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கத்தார் உலகக் கோப்பையை காணச் சென்ற பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும்,அந்நாட்டின் சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA World Cup 2022, Qatar