சமீப காலமாகவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இது இந்திய சுகாதாரத்துறையின் தரத்தின் மீது பெரும் அழுத்தத்தை தந்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் என்ற மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளான AMBRONOL syrup and DOK-1 Max syrup ஆகிய இருமல் மருந்து தரமற்றவை எனவும், இதை பயன்படுத்துவது பாதுகாப்பு இல்லை எனவும் உலக சுகாதார அமைப்பு தனது அறிவிப்பில் கூறியுள்ளது. இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி உயிரைக் கூட பறிக்கும் அபாயத்தை கொண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்நிறுவனத்தின் இருமல் மருந்தை அருந்திய 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக 21 குழந்தைகள் டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தை அருந்தியுள்ளனர். இதில், 18 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, உஸ்பெகிஸ்தானில் மரியான் பயோடெக் நிறுவனத்தின், டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்-1 மேஸ்க் இருமல் மருந்தில் எத்திலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் கலந்திருப்பதாகவும், இதுவும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகாரைத் தொடர்ந்து மரியான் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்து உத்தரப் பிரதேச அரசின் மருந்தக ஆய்வாளர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை.. தாலிபான் அதிரடி உத்தரவு
இதற்கு முன்னதாக ஆப்ரிக்க நாடான காம்பியாவிலும் இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் பலர் உயிரிழந்ததாக சர்ச்சை வெடித்தது. தொடர் புகார்களை அடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய ஆய்வு நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children, UZBEKISTAN, WHO