முகப்பு /செய்தி /உலகம் / ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்: யார் இவர்?

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்: யார் இவர்?

விஜயா கடே மற்றும் ட்ரம்ப்

விஜயா கடே மற்றும் ட்ரம்ப்

ட்ரம்பின் மைக்ரோ பிளாக்கிங் தளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ட்விட்டர் கணக்குகளை பல்வேறு யூசர்கள் புறக்கணித்து வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய பெண் வேறு யாருமல்ல, விஜயா கடே (Vijaya Gadde) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் மற்றும் சமூக ஊடகத்தில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட காரணங்களுக்காக ட்விட்டர் (Twitter) நிறுவனம் அதிபர் டிரம்ப்பின் (Donald Trump) கணக்கை நிரந்தரமாக முடக்கியது. ட்ரம்பின் மைக்ரோ பிளாக்கிங் தளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ட்விட்டர் கணக்குகளை பல்வேறு யூசர்கள் புறக்கணித்து வருகின்றனர். மேலும் இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய பெண் வேறு யாருமல்ல, விஜயா கடே (Vijaya Gadde) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். 

கடந்த புதன்கிழமை (ஜன 6) கேபிடல் ஹில்லில் வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, MAGA (Make America Great Again) ஆதரவாளர்கள் ஜாக் டோர்சிக்குச் (Jack Dorsey) சொந்தமான ட்விட்டர் தளத்திலிருந்து பெருமளவில் வெளியேறினர். அதேசமயம், மற்றவர்கள் ட்ரம்ப் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவரின் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய வம்சாவளி விஜயா கடே தலைமை தாங்கினார் என்பது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த விஜயா கடே?

இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். இவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும், நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பையும் முடித்துள்ளார். இவர் ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை வழக்கறிஞராகவும், பி.ஆர் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளார். மேலும் நிறுவனத்தின் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 

கடந்த 2011ம் ஆண்டு ட்விட்டரில் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2014ம் ஆண்டில், ட்விட்டரின் நிர்வாகக் குழுவில் ஒரே பெண்மணியாக இருந்ததால் இவர் பார்ச்சூன் என பெயரிடப்பட்டார். அறிக்கையின்படி, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ட்விட்டர் நிறுவனத்தில் சட்டக் கொள்கைகளை வடிவமைக்க கடே உதவியுள்ளார். ஓவல் அலுவகத்தில் டிரம்பிற்கும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கும் இடையிலான சந்திப்பின் போது இவரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு குழந்தையாக அமெரிக்காவிற்குச் சென்ற கடே டெக்சாஸில் வளர்ந்தார். ட்விட்டரில் சேருவதற்கு முன்பு கல்ஃப் ஆப் மெக்ஸிகோவில் ரசாயன பொறியியலாளராக பணியாற்றினார்.

விஜயா கடே வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

ட்விட்டரின் சட்டம், கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் தலைவராக, ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை சமூக ஊடக தளத்தில் இருந்து நீக்கம் செய்வதில் கடே தலைமை தாங்கினார். மேலும் ட்ரம்பின் கணக்கு கடந்த வெள்ளிக்கிழமை முடக்கப்பட்டதை தொடர்ந்து, கடே தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாவது, வன்முறை ஆபத்து காரணமாக @realDonaldTrump -ன் கணக்கு ட்விட்டரில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது " என தெரிவித்தார்.

Also read... ஒபாமாவின் இந்திய பயணம் - ரகசியங்களை உடைத்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் புத்தகம்!

ட்ரம்பின் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம்:

ட்ரம்ப் மற்றும் ட்விட்டர் நிறுவனம் இரண்டிற்கும் இடையே பல மாதங்களாக மறைமுக மோதல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்ட ட்வீட்களை ட்விட்டர் 'போலி செய்தி' என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ட்ரம்பின் டீவீட்டை தொடர்ந்து கடந்த புதன்கிழமை (ஜன.6) அமெரிக்க வெள்ளை மாளிகை கட்டிடத்தில் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து வன்முறையை தூண்டியதற்காக ட்ரம்பின் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. ட்விட்டர் வெளியிட்ட அறிவிப்பின்படி, "ட்ரம்ப் தனது சமூக ஊடக கணக்கை அணுக அனுமதிப்பது வன்முறையை மேலும் தூண்ட வழிவகுக்கும்." என்று தெரிவித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Donald Trump, Trump Tweet