கட்டட தொழிலாளி... 6 வார பயிற்சியில் போர்க்களம் கண்டவர்...! யார் இந்த சுலைமானி...?

  • News18
  • Last Updated: January 4, 2020, 12:51 PM IST
  • Share this:
மூன்றாம் உலகப் போர் வந்துவிடும் என்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது. 

ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனிக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்கவராக வலம் வந்தவர். குவாசெம் சுலைமானி. 62 வயதான சுலைமானி, Quds Force என்றழைக்கப்படும் இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவர்.

இராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குவாசெம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈராக்கில் இயங்கி வரும் ஹசீத் பயங்கரவாத குழுவின் முக்கிய தளபதியான அபு மகாதி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர்


காசெம் சுலைமானி மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் அரசு, அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியுள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நிச்சயமாக பழிவாங்கப்படுவார்கள் என இரான் அதிபர் அயதுல்லா கோமேனி எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கை "மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது" என்று இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் குவாசெம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை போராளிகள் அமைப்பு சுற்றி வளைத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஈரானில் மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, பின்னாளில் அமெரிக்க வல்லரசை நடுங்க வைத்தார் குவாசெம் சுலைமாணி.

13 வயதில் கட்டத்தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சுலைமாணி, அயதுல்லா கோமேணியின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு ராணுவத்தில் இணைந்தார். 6 வார காலமே பயிற்சி பெற்ற குவாசெம், போர் களத்திற்கு பயணப்பட்டார்.

1980- ஆம் ஆண்டுகளில் ஈரான் ஈராக் போரில் களம் கண்ட குவாசெம், சதாம் உசேனுக்கு எதிராக ஷியா மற்றும் குர்து படைகளை திரட்டி போர் பயிற்சி அளித்தார்.

அவரின் அதிரடி நடவடிக்கைகள், ஈரான் அரசை வெகுவாக கவர்ந்தது, ஷியா மக்களால் குவாசெம்மை கடவுளாகவே பார்க்கப்பட்டார். ஆனால் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பவர் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியது.

1998- ஆம் ஆண்டு புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரான் நாட்டு அதிகாரபூர்வ ராணுவத்திற்கு இணையாக தொடங்கப்பட்ட, இந்த புரட்சிகர ராணுவ படையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இதற்கு தனியாக தரைப்படை, விமான மற்றும் கடற்படை உள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் பெரும் செல்வாக்கோடு வலம் வரும் இப்படை, ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கு தொழில்நுட்பம், ராணுவ பயிற்சி, நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகிறது.

இக்காரணங்களால் குவாசெம்மை பயங்கரவாதி என அறிவித்தது அமெரிக்கா. அவருடன் தொழில் ரீதியான தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் தடை விதித்தது

அமெரிக்காவின் வற்புறுத்தல்களை தொடர்ந்து, 2007 - ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் பட்டியலில் குவாசெம்மை சேர்த்து ஐக்கிய நாடுகள் சபை. 2014- ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, ஈராக் ராணுவத்துடன் இணைந்து போர் புரிந்தார்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்