ஐ.நா சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் யார்? ஏன் அவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்?
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூரில் கடந்த 1968-ம் ஆண்டு பிறந்த மசூத் அசார், பட்டப் படிப்பை முடித்ததும் மதரசாவில் ஆசிரியராக பணியை தொடங்கினார். அப்போது, ஆப்கானிஸ்தானில் ஜிகாதி குழுக்களுக்கு பயிற்சியளித்து வந்ததுடன் சோவியத் நாட்டுடனான போரில் பங்கேற்று சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கு பின்னர் பல்வேறு நாடுகளில் நிதி திரட்டி கருத்துக்களை பரப்பி வந்தார்.
அமெரிக்கா எச்சரிக்கை:
1994-ம் ஆண்டு ஹர்கத் உல் அன்சர் அமைப்பின் பொதுசெயலாளராக பதவியேற்ற அவர், பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற முயற்சிப்பதாக அப்போது அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே, 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போலி ஆவணங்களை காட்டி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்குள் நுழைந்ததாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1999-ம் ஆண்டு நேபாளில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர் லைன்ஸ் விமானத்தை கந்தகாருக்கு கடத்திச் சென்ற தீவிரவாதிகள், இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதனையேற்று மசூத் அசார் உட்பட 3 தீவிரவாதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் தாக்குதல்:
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் தஞ்சம் புகுந்த மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை உருவாக்கினார். பின்னர் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மசூத் அசார் பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரை லாகூர் உயர்நீதிமன்றம் விடுவித்தது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் பதான்கோட் விமானப்படை தாக்குதல்களையும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு அரங்கேற்றியது.
இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்நீத்தனர். இதைத்தொடர்ந்தே மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்
Also see... சர்வதேச அளவில் பணக்காரர்கள் அதிகமுள்ள டாப் 10 நகரங்கள்
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.