பருவநிலை மாற்றம் எதிரொலியாக 30 நாடுகளில் காலரா பரவல் ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், பலத்த மழை என்பதனால் தண்ணீர் மாசுபாடு, உணவு மாசுபாடு அதிகரித்து வருகிறது. அதனால் நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது.
விப்ரியோ காலரா என்ற பாக்டீரியத்தால் மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரை உண்ணுதல் அல்லது குடிப்பதால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தான் காலரா தொற்று ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வோர் ஆண்டும் 1.3 முதல் நான்கு மில்லியன் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த நோயால் உலகளவில் 21,000 முதல் 143,000 பேர் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை காலநிலை மாற்றத்தால் மேலும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் காலரா பரவலானது, கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 20-க்கும் குறைவான நாடுகளில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நடப்பு 2022-ம் ஆண்டில் காலரா வியாதியானது, 30 நாடுகளில் பரவியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.3 லட்சம் மானியம்.. சூப்பர் சலுகை அறிவித்த ஜப்பான்!
இது பற்றி உலக சுகாதார அமைப்பின் காலரா மற்றும் தொற்றியல் வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா ஜெனீவாநகரில் பேசும்போது, இந்த அதீத பரவலுக்கு காலநிலை மாற்றம் தான் பெரிதும்காரணம் என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் சூழ்நிலையானது முற்றிலும், முன்னெப்போதும் இல்லாதவகையில் வேறுபட்டு உள்ளது. இந்த மாற்றத்தால்,காலரா பரவல் விகிதமும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. தொற்று மட்டுமன்றி மரண விகிதங்களும் முந்தைய பல ஆண்டுகளை விட அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் இந்த பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
கெட்டுபோன உணவு அல்லது குடிநீர் ஆகியவற்றை எடுத்து கொள்வதனால், பரவ கூடிய இந்த வயிற்றுப்போக்கு பாதிப்புகளால் ஏற்பட கூடிய காலரா தொற்றானது ஆண்டுக்கு, 40 லட்சம் பேரை பாதிக்கிறது. இதனால், 21 ஆயிரம் முதல் 1.43 லட்சம் பேர் வரை உலகம் முழுவதும் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.