2019 இல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலில் அதிகம் பாதித்த ஓமைக்ரான் வரை வைரஸை ஆபத்துக்குரிய புதிய வேரியண்ட் நோய் தொற்று என்று அறிவித்து ஒரு வருடங்கள் ஆனதை அடுத்து உலக சுகாதார அமைப்பு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
அதில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், '90 சதவிகித மக்களுக்கு கொரோனாவிற்கு எதிராக அவர்களின் உடலில் சக்தி தோன்றி விட்டதாக கூறினார்.
2019 இல் முதலில் தொற்று ஏற்பட்ட நோய் கிருமி பல மாறுதல்கள் கொண்டு மக்களை தாக்கியது. சளி, சுவையின்மை , மூச்சு விட சிரமம் என்று சிலருக்கு அறிகுறிகள் தெரிந்தாலும் அறிகுறிகளே இல்லாமல் பலரை பாதித்தது.
இதையும் படிங்க : 6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை தொடங்க எலான் மஸ்க் திட்டம்
இந்நிலையில் , நோய் தொற்று அல்லது தடுப்பூசி காரணமாக, உலக மக்கள்தொகையில் குறைந்தது 90 சதவிகிதத்தினர் இப்போது SARS-CoV-2 க்கு ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர் என்று WHO மதிப்பிடுகிறது" என்று டெட்ரோஸ் கூறினார்.
Omicron அதன் முன்னோடியான டெல்டாவை விட கணிசமா கூடுதலாக பரவக்கூடிய தன்மையை நிரூபித்த பின்னர், உலகம் முழுவதும் பரவியது. இன்றும் பரவல் இருந்துகொண்டு தான் இருக்கிறது. நோய் முழுமையாக போய்விட்டது என்று சொல்லும் அளவு இல்லை.
கிட்டத்தட்ட 640 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பரவலில் மற்றும் 6.6 மில்லியன் இறப்புகளை உலக சுகாதார அமைப்பு பதிவு தெரிவித்துள்ளன. ஆனால், ஐ.நா. துணையான எண்ணிக்கை இத விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கின்றனர். கடந்த வாரம் மட்டுமே 8,500 க்கும் மேற்பட்டோர் கோவிட் நோயால் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் கூறி வருந்தினார்.
இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. சீனாவில் தினசரி நோய் பதிவு ஆயிரங்களை தாண்டி வருகிறது. இருந்தாலும் முந்தைய வகைகளை விட இப்பொழுது பரவுவது வீரியம் குறைந்து காணப்படுகிறது. மக்களிடம் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் கூட அது வீரியம் குறைந்து காணப்படலாம் என்று தெரிவித்தார்.
இன்றைய சூழலில் மக்களுக்கு கொரோனாவிற்கு எதிராக எதிர்ப்புசக்தி உருவாகியிருப்பது உண்மை என்று உலக சுகாதார நிறுவனம் நம்புகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.