திட்டமிட்டு வெளியேறிவிட்டார் - டிரம்பை மறைமுகமாக சாடிய WHO இயக்குநர்

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை ஒருவர் திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாகவும் அதிபர் ட்ரம்பை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் மறைமுகமாக சாடினார்.

திட்டமிட்டு வெளியேறிவிட்டார் - டிரம்பை மறைமுகமாக சாடிய WHO இயக்குநர்
டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்
  • Share this:
கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்காமல் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் ஆதனாம் அழைப்புவிடுத்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் மட்டுமின்றி உலகளாவிய ஒற்றுமையின்மையும் நம் முன் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் கவலை தெரிவித்தார்.உலக நாடுகள் ஒன்றிணையாமல் தன்னிச்சையாக கொரோனா பெருந்தொற்றை ஒழிக்க முடியாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

Also read... ஜெர்மனி இறைச்சித் தொழிற்சாலையில் 1,331 பேருக்கு கொரோனா...!

மேலும், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்காவை ஒருவர் திட்டமிட்டு வெளியேற்றிவிட்டதாகவும் அதிபர் ட்ரம்பை மறைமுகமாக சாடினார்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading