முகப்பு /செய்தி /உலகம் / மங்கி பாக்ஸ் நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது WHO

மங்கி பாக்ஸ் நோயை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது WHO

WHO

WHO

Monkeypox | குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க பகுதிகளில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை, தற்போது உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. குரங்கம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதற்கு முன் இல்லாத அளவு பல்வேறு நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஐரோப்பாவுக்கு குரங்கம்மையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆய்வாளர்களின் கருத்துகளின்படி குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் கொரோனா நோய் தொற்றுக்கு அடுத்தப்படியாக குரங்கம்மை நோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Monkeypox, WHO