அடுத்த ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்... உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!
அடுத்த ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்... உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!
உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்த ஒருவாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதானம் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அடுத்த ஒருவாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதானம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் தொடர்ந்தாலும், ஏற்கனவே உள்ள கட்டமைப்பைக் கொண்டு தற்போதைக்கு வைரஸ் பரவுவதை தடுத்து, மனித உயிர்களை காக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நோயாளியின் உயிரை காப்பாற்ற தேவைப்படும்போது ஆக்ஸிஜன் செலுத்துவதே சரியான தீர்வு என்று கூறிய அவர், தற்போதைய நிலவரப்படி வாரத்திற்கு 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படும் பட்சத்தில் நாளொன்றுக்கு 88,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.