'தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று'.. தனிமைப்படுத்திகொள்வதாக WHO இயக்குநர் ட்வீட்..

டெட்ரோஸ்

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார். 

 • Share this:
  தன்னுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

  அறிகுறிகள் இல்லாமல் உடல்நலம் சீராகவே இருப்பதாகவும், தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்தே பணியில் இருக்கப்போவதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

  முன்னதாக, கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானெம், அடுத்து வரவிருக்கும் சிலமாதங்கள் கடினமானவையாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்தார்.
  Published by:Gunavathy
  First published: