கொரோனாவிலிருந்து தப்பிக்க ஊரடங்கு மட்டும் போதாது- உலக சுகாதார நிறுவனம்

சர்வதேச அளவில் 4 லட்சம் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் 21,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க ஊரடங்கு மட்டும் போதாது- உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல்
  • Share this:
கொரோனா வைரஸை முற்றிலும் அழித்துத் தப்பிக்க வெறும் ஊரடங்கு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர்- ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியசஸ் தெரிவித்துள்ளார்.

கெப்ரியசஸ் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஆனால், ஊரடங்கு அறிவித்தால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாது. இந்த சமயத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக, ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இருக்காது. இது மிகப்பெரிய வாய்ப்பு. இத்தகைய சூழலில் ஊரடங்கு அறிவித்ததுடன் மட்டும் நிற்காமல், பாதிப்பு பரவும் நிலை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை, அவர்கள் சார்ந்த பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.


சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 21,000 பேர் மரணமடைந்துள்ளனர். ஊரடங்கு வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு அரசு துரிதகதியில் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: கொரோனா அச்சுறுத்தல்: தனி வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்... உதவும் ரயில்வே..!
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading