கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத் தாழ்வு: உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி

தடுப்பூசிகளை ஏற்கனவே அதிகம் பயன்படுத்திகொண்ட நாடுகள் மேலும் அதிகமாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  உலகின் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸையே  செலுத்துக்கொள்ளாத நிலையில், பணக்கார நாடுகள் மூன்றாவது டோஸை செலுத்த அவசரப்பட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளார்.

  உலக அளவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்டா வகை கொரோனா வைரஸ் மிகவும் வீரியமானது என கூறப்படுகிறது. எனவே, ஒருசில நாடுகள் தங்கள் மக்கள் டெல்டா வகை கொரோனாவில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளன. பூஸ்டர் ஷாட்ஸ் (Booster shots) எனப்படும் இந்த தடுப்பூசி செலுத்தலை சிறிது காலம் தள்ளிப் போடும்படி  உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம், தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் பணக்கார மற்றும் ஏழை நாடுகள் இடையே  நிலவும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொள்ள குறைந்தது செப்டம்பர் மாதத்தின் இறுதிவரை மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  இதையும் படிங்க: வாடகைக்கு விடப்படும் பிரதமர் பங்களா - நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் வி.வி.ஐ.பி. களுக்கு இனி சாதாரண வீடுதான்


  ‘டெல்டா வகை கொரோனாவில் இருந்து தங்கள் மக்களை காப்பாற்ற வேண்டும் என ஒரு அரசாங்கம் கவலைப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தடுப்பூசிகளை ஏற்கனவே அதிகம் பயன்படுத்திகொண்ட நாடுகள் மேலும் அதிகமாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகில் ஆபத்தான நிலையில் உள்ள ஏராளமான மக்கள் இன்னும் பாதுகாப்பாக இல்லை’ என்று அவர் கூறினார்.

  உயர் வருவாய் நாடுகளுக்கு  தடுப்பூசிகள் அதிகம் செல்வதை குறைத்துவிட்டு ஏழை நாடுகளுக்கு அதிகம் தடுப்பூசிகள் செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.  மருந்து தயாரிப்பு நாடுகளும் நிறுவனங்களுக்கும் ஏழை நாடுகளுக்கு அதிக அளவில்தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

  மேலும் படிக்க: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா!


  இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவையென்றும் குறிப்பாக சர்வதேச அளவில் தடுப்பூசி விநியோகத்தை கட்டுப்படுத்தும்  நாடுகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.

   
  Published by:Murugesh M
  First published: