உலகம் முழுவதும் ஒமைக்ரான் (Omicron) தொற்று அதிகரித்து வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுரை வழங்கியுள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், டெல்டா வகையை விட ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவுவதற்கு ஆய்வுச்சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறினார். மேலும், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கும் ஒமைக்ரான் பரவுவதாகவும் அதானோம் தெரிவித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்க அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கொரோனா அலை மீண்டும் வேகமெடுத்துள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி, மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய அவர், கொரோனா பரவல் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அதனை சமாளிக்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் பரவலை, நிபுணர்களைக்கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் இதுவரை 88 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்றார். 58 விழுக்காடு பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்றால் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பல்வேறு துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Also Read : ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வைத்திருந்தால் நடவடிக்கை
இதனை தொடர்ந்து பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் மாநிலத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 3ஆவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும் புதிதாக பதிவாகும் அனைத்து கொரோனா தொற்றுகளும் ஒமைக்ரான் வகையை சேர்ந்ததா என ஆய்வு செய்யப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Read More : ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்
மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கும் திட்டமில்லை என்று மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் பதிவாகி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
Must Read : ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் மசோதா: எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றம்
இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒமைக்ரான் தொற்று அதிகபட்சமாக உள்ள நிலையில், மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று மேயர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், காவல்துறையினர் அதனை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christmas, New Year, New Year 2022, New Year Celebration, Omicron, WHO