கொரோனா வைரஸ் காற்றில் பரவும் - ஒப்புதல் அளித்த உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் - ஒப்புதல் அளித்த உலக சுகாதார நிறுவனம்
‘சைட்டோகைன் புயல்’ என்பது என்ன?
  • Share this:
கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை ஏற்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே புரட்டி எடுத்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரையில் கொரோனா 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது கொரோனா வைரஸ் தன்மைகள் குறித்து புதிய புதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுவருகின்றன. இதுவரையில் கொரோனா வைரஸ் காற்றில் பரவாது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், பேசும்போது, இருமும்போதும் வெளிப்படும் சிறிய எச்சில் துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று விவரிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இருதினங்களுக்கு முன்னர், 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் அறிஞர்கள், உலக சுகாதார மையத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், ‘காற்றில் கரோனா வைரஸ் பரவும். ஒருவர் தும்மியபின், இருமியபின் அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் அந்த நுண் கொரோனா வைரஸை உள்ளே சுவாசித்தால் அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால், கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்று அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தனர்.இந்தநிலையில் இதுகுறித்து ஜெனிவாவில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வேன் கெர்க்கோவ், ‘கொரோனா வைரஸ் பரவும் வழிமுறைகளில் காற்றின் மூலம் பரவும் சாத்தியம் குறித்து நாம் பேசிவருகிறோம். கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. ஆனால், அவை உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. காற்றில் பரவுவதற்கான சாத்தியங்கள் என்பது பொதுஇடங்களின் தன்மையைப் பொருத்தது.

கூட்டம் நிறைந்த இடங்கள், அடைக்கப்பட்ட இடங்கள், நெருக்கமான இடங்கள், காற்றோட்ட வசதி இல்லாத இடங்களில் காற்றின் மூலம் பரவுகின்றன என்பதை நிராகரிக்க முடியாது. எப்படியிருந்தாலும், அந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுசெய்யப்படவேண்டும். நாங்கள் இதற்கு ஆதரவு அளிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading