ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் உள்நாட்டு குழப்பமா.. என்ன ஆனார் அதிபர் ஜி ஜிங்பிங்.. சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் பரபரப்பு தகவல்கள்

சீனாவில் உள்நாட்டு குழப்பமா.. என்ன ஆனார் அதிபர் ஜி ஜிங்பிங்.. சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் பரபரப்பு தகவல்கள்

சீனா அதிபர் ஜி ஜின்பிங்

சீனா அதிபர் ஜி ஜின்பிங்

சீனாவில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaBeijingBeijing

  சீனாவில் அரசுக்கு எதிராக கலகம் ஏற்பட்டு, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ராணுவ வாகனங்கள் தலைநகர் பெய்ஜிங் நோக்கி அணிவகுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அதிபர் ஜி ஜின்பிங் வீட்டின் அருகேயும் ராணுவ வாகனங்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இது குறித்து ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

  கோவிட் பரவலுக்குப் பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வெளிநாட்டு பயணமும் செல்லாமல் இருந்த அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் தான் முதன்முதலாக உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற SCO மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டிற்குப் பின் நாடு திரும்பிய அவர் அதன் பின் இதுவரை வெளியேவந்து எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

  இவற்றை எல்லாம் வைத்து தான் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் உள்ளாரா என்ற செய்தி புகைச்சலாக பரவி வருகிறது.தன்னை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்த இரு மூத்த தலைவர்களுக்கு தண்டனை விதித்து அரசு உத்தரவிட்டது. ஜி அரசின் இந்த செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களே ஜி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஜியை வீட்டுக்காவலில் வைத்து அடுத்த அதிபராக லி குயாவ்மிங் பதவியேற்க உள்ளார் என்ற கருத்தும் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது.

  இதையும் படிங்க: புலம் பெயர் மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 77 பேர் பரிதாப மரணம்

  இத்தனை பெரிய அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியே வரவில்லை. எனவே, சீனாவில் நடைபெறும் நகர்வுகள் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன. குறிப்பாக குவாட் கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சீனா அரசியல் நகர்வுகள் அனைத்தையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கவனம் பெருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: China, Viral News, Xi jinping