வீல்சேரில் வந்து பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் - சிசிடிவி காட்சிகள்
பிரேசிலின் கனெலா பகுதியில் உள்ள நகைக்கடைக்கு சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தத் தொடங்கினார்.

பிரேசிலில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!
- News18 Tamil
- Last Updated: May 28, 2020, 5:08 PM IST
பிரேசிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் கனெலா பகுதியில் உள்ள நகைக்கடைக்கு சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கடையில் இருந்த காசாளரிடம் ஒரு குறிப்பைக் கொடுத்தார். அதில் அமைதியாக பணத்தை ஒப்படைக்குமாறு குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காசாளர் அதனை விளையாட்டாக நினைத்து பணியைத் தொடர்ந்தார்.
அப்போது தனது கால்களால் துப்பாக்கியை நீட்டிய நபர் காசாளரை அச்சுறுத்தத் தொடங்கினார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாற்றுத்திறனாளி நபரை மடக்கிப் பிடித்தனர். அப்போது தான் அவரால் பேச முடியாது என்பதை அறிந்து கொண்ட போலீசார், அவர் கையில் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்பதையும் கண்டறிந்தனர்.