Home /News /international /

கிம் ஜாங் உன்னின் எடை இழப்புக்கான காரணத்தை கூறும் அதிபரின் விலைமதிப்புமிக்க வாட்ச்!

கிம் ஜாங் உன்னின் எடை இழப்புக்கான காரணத்தை கூறும் அதிபரின் விலைமதிப்புமிக்க வாட்ச்!

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

சியோலை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனம் டெய்லி என்.கே., கிம் ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கிம் ஜாங் உன் கடந்த வார இறுதியில் ஊடகங்களுக்கு காட்சிகொடுத்த போது அவர் சற்று உடல் எடையை இழந்திருப்பது போன்று தெரிந்தது. உண்மையிலேயே வட கொரிய அதிபர் உடல் எடையை குறைத்துள்ளாரா? இந்த கேள்விகளுக்கு அதிபரின் சுவிஸ் டைம்பீஸ், அவர் எடையை இழப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதற்கான தெளிவான ஆதாரங்களை வழங்கியுள்ளது.

அதிபர் கிம்மின் கீழ் இயங்கும் IWC Schaffhausen Portofino அமைப்பின் மாநில ஊடகங்கள் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்களில் அவரது மணிக்கட்டில் இறுக்கமாக இந்த வாட்ச் கட்டப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று என்.கே. நியூஸ் கடந்த செவ்வாயன்று (மே.8) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோலை தளமாகக் கொண்ட என்.கே. செய்தித் தளம் கடந்த சில மாதங்களாக அதிபரின் கையில் இருந்த 12,000 டாலர்கள் மதிப்புள்ள கடிகாரத்தை மிக நுணுக்கமாக கண்காணித்து ஒப்பிட்டுப் பார்த்து வந்தது. அதை கொண்டு அதிபர் சற்று உடல் எடையை குறைந்திருப்பதாக தகவல் அளித்துள்ளது. கிம் ஜாங் உன்னின் வயது 37 ஆகும்.

வட கொரியத் தலைவரின் எடை அவரது சர்வாதிகார மற்றும் இரகசிய ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்த துப்புகளுக்காக உளவு நிறுவனங்களால் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது குடும்பத்திற்கு இதய நோய் வரலாறு இருப்பதால் அவரின் உடல் நலம் குறித்து பல கேள்விகளும், சதேகங்களும் அடிக்கடி உருவாகும்.

தென் கொரியாவின் உளவு நிறுவனம் சேகரித்த தகவல் அடிப்படையில், ஆரம்பத்தில் கிம் 140 கிலோகிராம் (309 பவுண்டுகள்) எடை கொண்டவராக இருந்ததாகவும், 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுமார் 50 கிலோகிராம் எடை அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read : தமிழ்நாட்டின் மம்தா பானர்ஜியை மணம் புரியும் சோசலிசம்- வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

இதுகுறித்து என்.கே. நியூஸின் மூத்த பகுப்பாய்வு நிருபர் கொலின் ஸ்விர்கோ கூறியதாவது, "வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் கிம் ஜாங் உன் நீண்ட காலமாக தலைவராக இருக்க போதுமான ஆரோக்கியமானவர் என்பதை அறிய விரும்புகிறது. அவர் ஆரோக்கியமற்றவராக இருந்தால், உண்மையில் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது? இந்த விவகாரம் வட கொரியா அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் பிராந்தியத்தில் எந்த அளவு பாதுகாப்பை பாதிக்கும்?" என்ற கேள்விகளுக்கு விடை தேடி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அதிபர் வெளியில் வராததால், கிம்மின் உடல்நலம் குறித்து வெளியான வதந்திகளும், தகவல்களும் உலகளாவிய மக்களின் கவனத்தை ஈர்த்தது. கிம் உயிருடன் இல்லை என்றும் பல சர்ச்சை கருத்துக்கள் வெளியாகின. குறிப்பாக அவர் வெளிவராத காலத்தில் தனது மறைந்த தாத்தா மற்றும் மாநில நிறுவனர் கிம் இல் சுங்கிற்கான பிறந்தநாள் கொண்டாட்டங்களை கூட தவறவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் சியோலை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனம் டெய்லி என்.கே., கிம் ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை பெரிதாக யாரும் நம்பவில்லை. இறுதியாக அவர் வெளிவந்தபோது, அந்த கோட்பாட்டை ஆதரிப்பதற்கான சாத்தியமான ஆதாரமாக அவரது மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்த ஒரு வாட்ச்சை என்.கே. நியூஸ் சுட்டிக்காட்டியது. மேலும், கிம் தற்போது உடல் எடையை குறைப்பதில் ஈடுபட்டு வருகிறார் என்பதையும் ஊடகம் செய்து வெளியிட்டுள்ளது.

Also Read : நார்வே பனிப்பாறையில் 500 ஆண்டுகள் பழமையான மெழுகுவர்த்தி பெட்டி கண்டுபிடிப்பு!

பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான ஆளும் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டதாக கடந்த சனிக்கிழமை வெளியான செய்திகளுக்கு முன்பு வட கொரிய அரசு ஊடகங்களில் சுமார் ஒரு மாதமாக கிம் இடம்பெறவில்லை.

தொற்றுநோய், அமெரிக்க நாட்டின் தடைகள் மற்றும் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றுடன் வடகொரியா தொடர்ந்து போராடி வருவதால், பல தசாப்தங்களாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மோசமான பாதிப்பிற்கு பிறகு இந்த ஆண்டு வளர்ச்சியின் சிறிய அடையாளத்தைக் கண்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Kim jong un

அடுத்த செய்தி