• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலகின் முதல் மலேரியா தடுப்பூசியான Mosquirix-க்கு WHO அங்கீகாரம் - ஏன் இத்தனை தாமதம்?

உலகின் முதல் மலேரியா தடுப்பூசியான Mosquirix-க்கு WHO அங்கீகாரம் - ஏன் இத்தனை தாமதம்?

Malaria Vaccinne

Malaria Vaccinne

மலேரியாவால் ஆண்டுதோறும் 4 லட்சம் பேருக்கு மேல் மரணம் அடைவதாகவும், சுமார் 30 கோடி பேர் இந்நோயினால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Share this:
மலேரியா நோய்க்கு முதல் முறையாக Mosquirix எனும் தடுப்பூசி கண்டறியப்பட்ட நிலையில், அந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

கொசுக்களால் பரவும் மலேரியா நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. உலகின் ஆட்கொல்லி நோய்களில் ஒன்றாக மலேரியா திகழ்ந்து வந்தது, இந்த நோயினால் மட்டும் ஆண்டுதோறும் 4 லட்சம் பேருக்கு மேல் மரணம் அடைவதாகவும், சுமார் 30 கோடி பேர் இந்நோயினால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேரியாவால் குழந்தைகளுக்கு என்ன பாதிப்பு?

குழந்தைகள் அதிலும் குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மலேரியாவால் அதிக பாதிப்பை சந்தித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மட்டும் ஒட்டுமொத்த மல்யேரியா மரணங்களில், 67% அளவுக்கு அதாவது 5 வயதுகுட்பட்ட சுமார் 2.74 லட்சம் குழந்தைகள் மலேரியா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

Mosquirix (RTS,S/AS01)

கடந்த 30 ஆண்டுகளாக மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, மற்றும் சில என்.ஜி.ஓக்களுடன் இணைந்து கிளாக்சோஸ்மித் க்ளைன் எனும் நிறுவனம் கடந்த 1987ம் ஆண்டு முதலே ஈடுபட்டு வந்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் 2019ம் ஆண்டு Mosquirix தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

Also read:  சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! – முழு விவரம் உள்ளே

Mosquirix தடுப்பூசியை கானா, கென்யா, மலாவி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குறிப்பிடத்தக்க அளவில் தீவிர மலேரியா பாதிப்புக்கு எதிராக Mosquirix தடுப்பூசி பலன் தருவதாக சோதனை முடிவுகள் காட்டியது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே மலேரியாவால் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என்ற போதிலும் இந்தியாவிலும் மலேரியா கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களில் மலேரியா அதிக பாதிப்பையும், மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

GlaxoSmithKline (GSK) உருவாக்கியிருக்கும் Mosquirix தடுப்பூசிக்கு தற்போது உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்திருக்கிறது. எனினும் இந்த தடுப்பூசி குறைந்த அளவே செயல்திறன் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்படும் 10 பேரில் 4 பேரை மட்டுமே காக்கும் திறன் இந்த தடுப்பூசிக்கு இருப்பதாகவும், அதே நேரத்தில் மலேரியா காரணமாக மரணம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் திறன் ஓரளவுக்கு இந்த தடுப்பூசிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

Also read:  பிஎம் கேர்ஸ் நிதி மீது முறைகேடு புகார் கூறிய எதிர்கட்சிகள் செய்த விநோதம்!

ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் ஒரே ஆண்டில் 8 முறை கூட குழந்தைகளுக்கு மலேரியா பாதிப்பு ஏற்படும் எனவும், இதுபோன்ற சூழலில் Mosquirix தடுப்பூசி குழந்தைகள் நலனில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: