முகப்பு /செய்தி /உலகம் / உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகம் செய்யும் COVAX திட்டம் என்பது என்ன?

உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகம் செய்யும் COVAX திட்டம் என்பது என்ன?

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிகளை உலகளவில் சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். இது வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது.

  • Last Updated :

COVAX திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்ற உலகின் முதல் நாடு கானா (Ghana) ஆகும். புனேவில் உள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) தயாரித்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியில் சுமார் 6,00,000 டோஸ் பிப்ரவரி 23-ம் தேதி அன்று கானா நாட்டில் உள்ள அக்ராவுக்கு அனுப்பப்பட்டது.

இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி இந்த மாதத்தில் WHO-ஆல் அவசர பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்கப்பட்டது. அஸ்ட்ராஜெனிகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து COVAX திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியனுக்கும் அதிகமான COVID-19 தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

COVAX என்றால் என்ன?

கொரோனா தடுப்பூசிகளை உலகளவில் சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். இது வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது. யுனிசெஃப் (UNICEF), தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி (World Bank) போன்ற அமைப்புகளுடன் தடுப்பூசி கூட்டணி (GAVI), உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) ஆகியவை இணைந்து COVAX திட்டத்தை வழிநடத்துகின்றன.

COVAX தொடர்பாக நேச்சர் இதழில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உலகின் ஏழ்மையான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் COVAX முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 92 அட்வான்ஸ் மார்க்கெட் கமிட்மென்ட் (Advance Market Commitment) நாடுகளில் சுமார் 20 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட இந்த திட்டம் வழிவகை செய்துள்ளது. இதில் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு பணம் செலுத்த முடியாத நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் அடங்கும்.

இதன் பொருள் தனிநபர் மொத்த வருமானம் (Gross National Income) சுமார் 4,000 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருக்கும் நாடுகள் மற்றும் வேறு சில நாடுகள், உலக வங்கி சர்வதேச மேம்பாட்டுக் கழகத்தின் (World Bank International Development Association) கீழ் தகுதியுடையவை என்று கூறப்படுகிறது. முதலில் ஒப்புதல் பெறப்படும் தடுப்பூசிகள் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் வாங்கப்படும். பின்னர் தகுதிவாய்ந்த நாட்டின் ஒவ்வொரு மக்கள்தொகையிலும் சராசரியாக 20 சதவீதத்தினருக்கு செலுத்த தேவையான அளவை இலவசமாக வழங்க முயற்சிக்கும். சுமார் 2 பில்லியன் தடுப்பூசி அளவை இலக்காகக் கொண்டுள்ள நிலையில் தற்போது 1.3 பில்லியன் தடுப்பூசி டோஸ் AMC நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் இந்த திட்டத்திற்கான நிதி இலக்கு சுமார் 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதில் இப்போது வரை சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி ஓரளவு உயர் மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலிருந்து வருகிறது. இந்த COVAX திட்டத்திற்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டில், இந்த திட்டத்தின் கீழ் சுமார் 550 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 8.52 சதவீதத்திற்கு சமம்.

கோவக்ஸ் திட்டத்தில் எந்தெந்த தடுப்பூசிகள் சேர்க்கப்பட்டுள்ளன?

கடந்த ஜூன் மாதம் 2020-ல் இந்த திட்டத்தின் கீழ் பதிவுசெய்த முதல் தடுப்பூசி உற்பத்தியாளராக ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா இருந்தது. மேலும் 300 மில்லியன் டோஸ்களை வழங்க உத்தரவாதம் அளித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் COVAX, ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்துடன் 40 மில்லியன் டோஸ் வரை தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்தது. கூடுதலாக, இந்த திட்டத்தில் ஜான்சன் & ஜான்சன் ஆகியோருடன் 500 மில்லியன் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதுதவிர COVAX அமைப்பு 200 மில்லியன் அளவுகளுக்கு SII உடன் ஏற்கனவே ஒப்பந்தங்களைக் போட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona virus, Vaccine