லெபனானை உருகுலைத்த வெடிவிபத்து... அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன? பயன்பாடுகள் என்னென்ன?

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் விபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

லெபனானை உருகுலைத்த வெடிவிபத்து... அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன? பயன்பாடுகள் என்னென்ன?
வெடிவிபத்து (Reuters )
  • Share this:
அம்மோனியம் நைட்ரேட் என்பதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3 ஆகும். இயற்கையாகவே கிடைக்கும் இதை, உலகம் முழுவதும் பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் உருவாக்கப்படுகிறது. அம்மோனியம் நைட்ரேட் பெரும்பாலும், விவசாயம் மற்றும் வெடி பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக அம்மோனியம் நைட்ரேட் உரமாக பயன்படுத்தப்படும் நிலையில், கட்டிடங்களை இடிக்கவும், பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் உதவுகிறது. இருப்பினும், அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் இல்லை என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


இது எரியும்போது சிவப்பு நிற புகையை வெளியிடும் என்றும், அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த புகை மனிதர்களை நொடியில் கொல்லும் திறனுடையது என்றும் எச்சரிக்கின்றனர். லெபனானை பொறுத்தவரை, ஒரே இடத்தில் சுமார் 5 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுவே அது வெடித்துச் சிதறுவதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்தை வாங்கி, அதில் இருந்து அம்மோனியம் நைட்ரேட்டை பிரித்து வெடிகுண்டுகள் தயாரிக்க முடியும் என்பதால், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading