• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • விறுவிறுக்கும் அமெரிக்கா தேர்தல்: அதிக செல்வாக்கு உள்ள கட்சி எது?

விறுவிறுக்கும் அமெரிக்கா தேர்தல்: அதிக செல்வாக்கு உள்ள கட்சி எது?

ட்ரம்ப்-பைடன் விவாதம்

ட்ரம்ப்-பைடன் விவாதம்

  • Share this:
    உலகின் வல்லரசான அமெரிக்காவில்  பிரதான கட்சிகள் என்பது இரண்டு மட்டுமே. ஒன்று குடியரசுக் கட்சி மற்றொன்று ஜனநாயக கட்சி. கிராண்ட் ஓல்டு கட்சி என்று அழைக்கப்படும் குடியரசுக் கட்சி, 1854-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி வரிக் குறைப்பு, துப்பாக்கி உரிமங்கள் மற்றும் குடியேற்றத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் ஆகிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது.

    அமெரிக்காவின் கிராமப்புற மக்களிடம் குடியரசுக் கட்சிக்கான ஆதரவு வலுவாக இருக்கும். ஆப்ரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்ட் ரீகன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோர் இக்கட்சியைச் சேர்ந்த புகழ்பெற்ற அதிபர்கள் ஆவர். இதுவரை குடியரசுக் கட்சியை சேர்ந்த 19 அதிபர்களை அமெரிக்கா கண்டுள்ளது. குடியரசுக் கட்சியின் சின்னம் யானையாகும்.

    ஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் தாராளவாத அரசியல் கட்சி ஆகும். 1828-ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. ஆண்ட்ரூ ஜாக்சன், மார்ட்டின் வான் பரேன் ஆகியோர் இக்கட்சியை தொடங்கினர்.  சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் தாராளமயம் மூலம் சமூக பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தக் கட்சியின் முக்கியக் கொள்கைகள் ஆகும். எல்.ஜி.பி.டி உரிமைகள், பன்முக கலாசாரவாதம், மதச்சார்பின்மை, வாக்களிக்கும் உரிமைகள் மற்றும் சிறுபான்மை உரிமைகள் ஆகியவற்றையும் இக்கட்சி ஆதரிக்கிறது.

    ஆண்ட்ரூ ஜாக்சன், ஜான் எஃப் கென்னடி, உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர்,  பில் கிளின்டன், பராக் ஒபாமா உள்ளிட்டோர் இக்கட்சியின் புகழ்பெற்ற அதிபர்கள் ஆவர். குடியரசுக் கட்சிக்கு முன்னரே தொடங்கப்பட்ட கட்சியானாலும் இதுவரை ஜனநாயக கட்சியினர் 13 பேர் அதிபர்களாகியுள்ளனர். ஜனநாயக கட்சியின் சின்னம் கழுதையாகும். 

    மேலும் படிக்க...அமெரிக்கா: அனைத்து நாடுகளும் உற்றுநோக்கும் தேர்தல் முடிவுகள்.. கொரோனா பரவலுக்கு இடையிலும் தேர்தலுக்கு தயாராகும் மக்கள்..



    அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 200 பெண்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட அதிபராகவோ துணை அதிபராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. தற்போது ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: