கடந்த வருடம் ஊரடங்குக்கு முன் மெக்ஸிகோவில் உள்ள பஜா கலிஃபோர்னியா பெனின்சுலா அருகே சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது திமிங்கலம் ஒன்று அவர்களது படகிற்கு பின்னால் நீரில் இருந்து வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றுள்ளது.
பின்னால் வந்த படகில் இருந்த புகைப்படக் கலைஞர் எரிக் ஜே ஸ்மித், அந்த காட்சியில் தனது கேமராவில் பதிவு செய்திருந்தார். அந்த போட்டோவில் படகில் இருந்தவர்கள் இன்னொரு பக்கம் கேமராவை வைத்து தயாராக நின்று கொண்டுள்ளனர். ஆனால் திமிங்கலம் அவர்களது படகின் மற்றொரு பக்கம் சென்றுள்ளது. இந்த சம்பவம் எரிக் எடுத்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
இந்த புகைப்படம் எடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட எரிக், நான் மற்றொரு படகில் சில அடிகளுக்கு அப்பால் இருந்தேன். அப்போது திமிங்கலம் மேலெழும்பி வந்ததை அனைவரும் அறிவதற்குள் நான் அதனை படம் படித்தேன். எல்லோரும் திரும்பி பார்க்கும் போது அது சரியாக உள்ளே சென்றது.
ALSO READ | 2008ல் தப்பி பிழைத்து வலிமையின் சின்னமாக புகழப்பட்ட பன்றி மரணம் - சீன மக்கள் அஞ்சலி!
திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை. அதற்கு அதிர்ஷ்டமும் வேண்டும். எப்பொழுதும் அலர்ட்டாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்றார். அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர, ஒரு வருடத்துக்கு பிறகு அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
திமிங்கலத்தின் அருகில் இல்லாததால் படகில் சென்றவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். இல்லையென்றால் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டிருப்பார்கள். இதுபோல் கடந்த ஜூன் 11ம் தேதி இறால்களை பிடிக்கும் தொழில் செய்து வரும் 56 வயதாகும் மைக்கேல் பக்கார்டு என்பவர் கேப் கோட் பகுதியில் 45 அடி ஆழத்தில் டைவிங் செய்துகொண்டிருந்தார்.
ALSO READ | 330 கிராமில் 6 மாதத்தில் பிறப்பு- மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை
அப்போது திமிங்கலம் ஒன்று விழுங்கியுள்ளது. முதலில் அவர் சுறாவுக்கு இறையாகி விட்டதாக நினைக்க, பின்னர் தான் அவருக்கு தான் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டிருக்கிறோம் என தெரியவந்திருக்கிறது. பின்னர் 30 நொடிகளில் அவரை மீண்டும் திமிங்கலம் வெளியில் கக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் அவரை அப்பகுதியில் மீன் பிடித்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடலில் காயங்கள் இல்லை என்றாலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பொதுவாக திமிங்கலங்களை விழுங்காது எனவும், மீன்களைப் பிடிக்க முயற்சித்த போது அவரை தெரியாமல் விழுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ALSO READ | போகிமான் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு; பிகாச்சுவைக் கொண்டு விமானத்தை வடிவமைத்த விமான சேவை
திமிலங்கத்தால் விழுங்கப்பட்டது குறித்து பேக்கார்ட் தெரிவித்ததாவது, முதலில் நான் சுறாவால் விழுங்கப்பட்டதாக நினைத்தேன், பின்னர் தான் அது திமிங்கலம் என்று உணர்ந்தேன் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது என் வாழ்க்கை அவ்வளவு தான் என முடிவு செய்து என் மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றி நினைத்துக்கொண்டேன். ஆனால் சில நிமிடங்களில் திமிங்கலத்தால் தூக்கி வீசப்பட்டு கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்தேன் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Photography, Whale shark