Home /News /international /

நெதர்லாந்தில் கொரோனா ஹோட்டலாக மாறிய ஏர்போர்ட் ஹோட்டல்!

நெதர்லாந்தில் கொரோனா ஹோட்டலாக மாறிய ஏர்போர்ட் ஹோட்டல்!

ஏர்போர்ட் ஹோட்டல்

ஏர்போர்ட் ஹோட்டல்

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏர்போர்ட் ஹோட்டல் ஒமைக்ரான் ஹோட்டலாக மாறியுள்ளது. விமான நிலைய ஹோட்டலாக செயல்பட்டு வந்த ஹோட்டல் ரமடாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் புதிய ஒமைக்ரான் வேரியன்ட் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

எல்லா நாடுகளிலும், எல்லா விமான நிலையங்கள் அருகிலும் பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல்கள் இருக்கும். நள்ளிரவு விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், விமானம் தாமதமானால் தங்குபவர்கள் அல்லது பறந்து கொண்டே இருக்கும் வணிகர்கள் சில மணிநேரம் தாங்கும் ஓய்விடமாகவும் விமான நிலைய ஹோட்டல்கள் செயல்படும். ஆனால், நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏர்போர்ட் ஹோட்டல் ஒமைக்ரான் ஹோட்டலாக மாறியுள்ளது.

அதாவது, உலகிலேயே அதிக அளவு உறுதி செய்யப்பட்ட கிளஸ்டராக கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்ஷிபோல் விமான நிலையத்தில் உள்ள ரமடா ஹோட்டல், ‘ஹோட்டல் ஒமைக்ரான்’ ஆக மாறியுள்ளது. சில நாட்களாக கொரோனா வைரசின் புதிய வேரியன்ட் ஒமைக்ரான் உலகம் முழுவதும் பரவி வருவதாக அனைத்து நாடுகளும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளனர்.

விமான நிலைய ஹோட்டலாக செயல்பட்டு வந்த ஹோட்டல் ரமடாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் புதிய ஒமைக்ரான் வேரியன்ட் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதைப் பற்றி உள்ளூர் டாக்சி டிரைவர் ‘கொரோனா ஹோட்டல்’ என்று கூறுகிறார்.

ALSO READ |  மணமகனைப் போல குதிரையில் வந்து கெத்து காட்டிய மணப்பெண்!

கொரோனா வைரஸ் ஊருக்குள் பரவாமல் தடுக்க, ஹோட்டலில் இருக்கும் யாரும் வெளியே செல்லக் கூடாது அல்லது தப்பிக்கக் கூடாது என்று பாதுகாப்புக்காக இரண்டு செக்யூரிட்டி கார்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா புதிய வேரியன்ட் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தென் ஆப்பிரிக்காவில் இருந்து KLM வந்த இரண்டு விமானங்களில் பயணித்த 624 பயணிகளில், 61 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. இதை இறுதி செய்த பிறகு, நெதர்லாந்து நாட்டு அதிகாரிகள், அவர்களை தனிப்படுத்தியுள்ளனர்.

அவர்களில் 14 நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தனிநபர் சுதந்திரத்தை மதிக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களில் இருக்கும் நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. ஆனால், தற்போது புதிய தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்க்க, பாதிப்பு அடைந்தவர்கள் குவாரைண்டைன் செய்யப்பட்டள்ளனர்.

ALSO READ |  ஜம்மு காஷ்மீரில் 1,300 ஆண்டுகள் பழமையான துர்க்கை சிலை கண்டுபிடிப்பு!

இவர்கள் காவல்துறையால் கட்டுபடுத்தப்படவில்லை. தாங்களாவே சுயமாக உணர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஹோட்டலிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், வெளிநாட்டை சேர்ந்த இரண்டு நபர்கள் ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், இளம் தம்பதியான, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 30 வயது ஆணும், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 28 வயதான பெண்ணும் ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

கிட்டத்தட்ட ஸ்பெயின் நாட்டுக்கு விமானம் ஏறிவிட்ட நிலையில், விமானம் கிளம்பும் முன்பு போலீசாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

ALSO READ |  பசுவின் வயிற்றில் இருந்து 77 கிலோ ஐஸ்கிரீம் கப்ஸ் மற்றும் ஸ்பூன்கள் அகற்றம்!

கோவிட் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முறைகள் இருந்தாலும், இந்த புதிய வேரியன்ட் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது அச்சுறுத்தக்கூடியதாக இருக்கிறது. விமானத்தில் வந்த தொற்று பாதிப்பு இல்லாத நபர்கள் குவாரண்டைன் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பத்து மாதங்கள் வரை மணம் மற்றும் சுவை உணர்வு இல்லாமல் இருந்த உள்ளூர்வாசியான அஞ்சா ‘கோவிட் பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை’ என்று தெரிவித்தார். ஊருக்கு வெளியே இருக்கும் ரமடா ஹோட்டலால் உள்ளூர் மக்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Netherlands, Omicron

அடுத்த செய்தி