ஹோம் /நியூஸ் /உலகம் /

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.. அதிபர் விளாதிமிர் புதின் அறிவிப்பு

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது.. அதிபர் விளாதிமிர் புதின் அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் நாட்டின் 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்ததைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. இதில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaMoscowMoscow

  உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஷியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னாட்டுடன் இணைத்து கொண்டது.

  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை. இரு நாடுகளின் போரானது அந்த பிராந்தியத்தை மட்டுமல்லாது உலக நாடுகளில் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  போரில் முக்கிய நகர்வாக கடந்த மாதம் ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்து உக்ரைனின் நகரப்பகுதிகளை உக்ரைன் நாட்டு படையினர் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் மற்றும் நோட்டோ நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என அதிரடியாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் நான்கு பிராந்தியங்களை அந்நாட்டில் இருந்து பிரித்து ரஷ்யாவுக்கு கீழ் இயங்கும் பிராந்தியங்களாக அறிவித்துள்ளார்.

  ரஷ்யா அரசு உக்ரைனில் தனது ஆக்கிரமிப்பில் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஷியா பிராந்தியங்களை இணைத்து கொள்ள மக்களிடையே வாக்கெடுப்பை நடத்தியது. பின்னர் மாஸ்கோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைந்ததாக அதிபர் புதின் அறிவித்தார். மேலும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை மேற்கத்திய நாடுகளை கொள்ளை அடித்து அடிமைப்படுத்தியதாக வரலாற்றை சுட்டிக் காட்டினார்.

  இந்நிலையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தன் வீட்டோ அதிகாரம் மூலம் ரஷ்யா முறியடித்தது.

  இதையும் படிங்க: அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட 'இயான்' புயல்... நாசா வெளியிட்ட பகீர் காட்சிகள்!

  இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் உக்ரைனில் நடக்கும் சம்பவங்கள் பெரும் கவலை தருவதாகவும், பேச்சுவார்த்தை ஒன்றே பிரச்னைக்குத் தீர்வு என்றும் தெரிவித்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Russia - Ukraine, Vladimir Putin