எலும்புக்கூட்டுடன் கண்டறியப்பட்ட மர்மமான திரவத்துடன் நீல நிற பாட்டில் – இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வு அதிர்ச்சி

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வு

இங்கிலாந்தில் உள்ள ஹல் (HULL) என்று சுருக்கமாகவும், பிரபலாகவும் அறியப்பட்ட கிங்ஸ்டன் அப்பான் ஹல் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியி

  • Share this:
சமீபத்திய யுகேவில் தொல்பொருள் ஆய்வின் போது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்தது. அந்த பெண்மணி இறக்கும் போது 60 வயது இருக்கலாம் என்றும், ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய எலும்புருக்கி நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூடுதல் ஆய்வு தெரிவித்தது.

உடன் கிடைத்த வினோதமான நீல நிற பாட்டிலில் பிரவுன் நிற திரவம் இருந்ததாகவும், சீல் செய்யபபட்ட அந்த பாட்டில் பெண்ணின் கால்களுக்கு இடையில் வைத்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

தொல்பொருள் துறை, அகழ்வாராய்ச்சி என்றாலே மிகவும் சுவாரஸ்யமான மற்றும் உற்சாகமான பணியாகும். ஏனெனில் காலத்தால் அழியாமல் இருக்கும் வரலாற்றுக் கூறுகள் மற்றும் பொக்கிஷங்களை வெளிக்கொண்டு வருவதில் பிரதான சாட்சிகளாக இருக்கின்றன.இங்கிலாந்தில் உள்ள ஹல் (HULL) என்று சுருக்கமாகவும், பிரபலாகவும் அறியப்பட்ட கிங்ஸ்டன் அப்பான் ஹல் நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது ஆச்சரியப்படக்கூடிய விதமாக எலும்புகூடு ஒன்று சமீபத்தில் வெளிப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு வெளிப்பட்ட எலும்புக்கூட்டின் கால்களுக்கு இடையில், ஒரு மர்மமான நீல திரவத்துடன் ஒரு பாட்டிலைக் கண்டுபிடித்தது.

ALSO READ |  பூமியின் மிகவும் பழமையான விலங்கின் புதைப்படிவத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: 890 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததா?

70 நிபுணர்களைக் கொண்ட இந்த குழு, பழைய டிரினிட்டி கல்லறையில், புதிய சாலை ஜங்க்ஷன் தளத்தை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன் தொடர்பாக, நிலத்தை தோண்டும் போது ஒரு எலும்புக்கூடு வெளிப்பட்டது. அதைக் கண்டதும் திடுக்கிட்டனர். காரணம், அந்த எலும்புக்கூட்டின் கால்களுக்கு இடையில் ஒரு ​​நீல நிற கண்ணாடி பாட்டில் இருந்தது. அந்த பாட்டில் ஏதேச்சையாகவோ, தெரியாமலோ வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அதில் 'ஹல் இன்ஃபர்மரி' என்று எழுதப்பட்டு, கால்களுக்கு இடையில் கவனமாக வைக்கப்பட்டது.கூடுதலாக ஆய்வு செய்த போது, அந்த ​​எலும்புக்கூடு ஒரு பெண்ணுடையது என்றும், அந்த பெண்மணி தனது 60 களில் இறந்திருக்கலாம் என்றும், அவர் ரிக்கெட் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டது. ஹல் டெய்லி மெயில் தனது அறிக்கையில் இந்த தகவல்களை வெளியிட்டது. தெரிந்தே கல்லறையில் வைக்கப்பட்ட, சீல் செய்யப்பட்ட பாட்டிலில் பழுப்பு நிற திரவம் இருந்தது.நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டியாலஜி மேற்பார்வையாளர் கேட்டி டால்மன், ஹல் டெய்லி மெயிலுக்கு பே பேட்டி அளித்துள்ளார். அதில், “திரவத்தை சோதனை செய்தோம். அதன் முடிவு, பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அந்த திரவம் சிறுநீராக இருக்கலாம். ஆனாலும், ஏன் கல்லறையில் வைக்கப்பட்டது போன்ற தொடர்ச்சியான கேள்விகள் எழுந்துள்ளது.

அது சிறுநீர் இல்லையென்றால், வேறு என்னவாக இருக்கக்கூடும்?” என்று கூறியுள்ளார். மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது, "அந்த திரவம் இது ஒரு பாஸ்பேட் அடிப்படையிலான டானிக் ஆகவும் இருக்கலாம். மேலும், 19 ஆம் நூற்றாண்டில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்பட்டது. அது மட்டுமின்றி மிகவும் பிரபலமாக இருந்தது.இந்த அகழ்வாராய்ச்சி திட்டம், ஹல் வரலாற்றில் மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வாகக் கருதப்படுகிறது. திட்டம் தொடங்குவதற்கு முன்பு, கிட்டத்தட்ட, 1500 எலும்புக்கூடுகள் வெளியேற்றப்படும் என்று கருதப்படுகிறது.

ALSO READ |  உலகின் முதல் தாவர எண்ணெய் சார்ந்த பிளாஸ்டிக்கை உருவாக்கிய ஜெர்மன் விஞ்ஞானிகள்!

அங்கு புதைக்கப்பட்டிருக்கும் அனைத்து எலும்புக்கூடுகளும், 1783 மற்றும் 1861 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தை சேர்ந்தவை. வளையங்கள், மோதிரம், நாணயங்கள், உடைகள் போன்ற கலைப்பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், நீல பாட்டிலில் பிரவுன் திரவம் என்பது ஆய்வாளர்களுக்கே இன்னும் விசித்திரமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: