• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்..

பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்..

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

  • Share this:
    பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    உலகளவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கட்டாயம் மருத்துவனைகளில் பயன்படுத்தப்படும் முகக் கவசத்தை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக பரவல் நிலையை எட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் எளிதில் தொற்று பாதிக்கக் கூடியவர்களும் மருத்துவ முகக்கவசத்தை அணிய வேண்டும்.

    தனிமனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் முகக்கவசம் மட்டும் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவாது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், முகக்கவசத்தை அடிக்கடி தொடுவது மற்றும் கழற்றுவது போன்றவற்றால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

    Also read... நாட்டின் குடிமகனுக்கு அடிபணிந்த ஆஸ்திரேலிய பிரதமர்... என்ன நடந்தது?






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: