ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவிடம் மண்டியிட மாட்டோம்: தைவான் உறுதி!

சீனாவிடம் மண்டியிட மாட்டோம்: தைவான் உறுதி!

தைவான்

தைவான்

சீனாவின் ஒரு அங்கமாக ஹாங்காங் இருந்தாலும் அந்நாட்டுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சீனா இடையே உள்ள ‘ ஒருநாடு இரு அமைப்புகள்’ கொள்ளைப்படி தைவானை தங்களுடன் இணைக்க சீனா விரும்புகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அமைதி வழியில் சீனாவுடன் தைவான் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஷி ஜின் பிங் கூறியிருந்தார். சீனாவின் இத்தகைய அழுத்தத்திற்கு மண்டியிட மாட்டோம் என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறியுள்ளார்.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது.  எனினும் தங்களது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாகவே தைவானை சினா கூறி வருகிறது. இதனை தைவான் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில்,  சீனப் புரட்சியின் 110-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தலைநகா் பெய்ஜிங்கில் ஷி ஜின்பிங் ( Xi Jinping) உரையாற்றினார்.

அப்போது, “அமைதியான முறையில் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும். தற்போது தைவானை சீனாவுடன் இணைப்பதற்கு தைவான் விடுதலைப் படைதான் மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளன. தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

சீனாவின் ஒரு அங்கமாக ஹாங்காங் இருந்தாலும் அந்நாட்டுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சீனா இடையே உள்ள ‘ ஒருநாடு இரு அமைப்புகள்’ கொள்ளைப்படி தைவானை தங்களுடன் இணைக்க சீனா விரும்புகிறது.

இதையும் படிங்க: 2021ல் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் - இந்தியாவிற்கு எந்த இடம்?

ஆனால் சீனாவின் முடிவை ஏற்க முடியாது என்று தைவான் (Taiwan) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தைவானின் தேசிய தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen ) , " நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ அந்த அளவுக்கு சீனாவிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வோம்.  தைவான் ஆவேசமாக செயல்படாது. ஆனால் , சீனா தங்கள் மீது அமைத்துள்ள பாதையில் தைவானை பயணிக்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாதப்படி பாதுகாப்பை பலப்படுத்துவோம் ” என்று தெரிவித்தார்.

First published:

Tags: China, Taiwan, Xi jinping