ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் - பாகிஸ்தானின் அறிவிப்புக்கு தாலிபான்கள் பதிலடி

ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் - பாகிஸ்தானின் அறிவிப்புக்கு தாலிபான்கள் பதிலடி

ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் - பாகிஸ்தானின் அறிவிப்புக்கு தாலிபான்கள் பதிலடி

ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் - பாகிஸ்தானின் அறிவிப்புக்கு தாலிபான்கள் பதிலடி

ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என பாகிஸ்தானின் அறிவிப்புக்கு தாலிபான்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாகிஸ்தான் நாணயத்தில் மட்டுமே ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என்ற அந்நாட்டின் அறிவிப்பை தாலிபான்கள் நிராகரித்துள்ளனர். ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்றும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

  ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதல், அங்கு ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தான் முயன்று வருகிறது. ஆப்கனின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக பாகிஸ்தானின் ரூபாய் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு நிதியமைச்சர் ஷகுத் தாரின் தெரிவித்திருந்தார்.

  இதன் மூலம் அந்நிய செலாவணி இருப்பை ஆப்கன் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் தாரின் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை மறுத்துள்ள தாலிபன்களின் கலாச்சார குழு தலைவர் அமநுல்லா வாஷிக், அண்டை நாடுகளுடனான வர்த்தகம் ஆப்கன் நாணயமான ஆஃப்கானிலேயே (afghani)நடைபெறும் என கூறினார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தேசிய அடையாளத்தை மதிப்பவர்கள் என்றும் தங்கள் நாட்டின் பண மற்றும் ஆன்மீக நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் நகர்வை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

  Also read: தாலிபான்கள் கையகப்படுத்திய பிறகு காபுலில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் - எந்த நாட்டுடையது?

  இதனிடையே இறந்துவிட்டதாக கருதப்பட்ட அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி-யின் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அல்-ஜவாஹிரி மரணமடைந்து விட்டதாக அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் ஜிகாதிகளின் இணைய நடவடிக்கைகளை கண்காணிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த SITE உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

  அதில் அல்-ஜவாஹிரி, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படவில்லை. ஆப்கனை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறுவது குறித்தும் அல்-ஜவாஹிரி பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்கா ராணுவத்தின் செயல்திறனை மேலும் கேள்விகுறியாக்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Taliban