Home /News /international /

'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' : ஐநா அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு

'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' : ஐநா அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு

உக்ரைனில் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. - ஐநா பொதுச்செயலாளர்

உக்ரைனில் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. - ஐநா பொதுச்செயலாளர்

உக்ரைனில் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. - ஐநா பொதுச்செயலாளர்

'உக்ரைனைக் கைவிட மாட்டோம்' என்று ஐநா பொதுச்சபை சிறப்பு அவசர கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கூறியுள்ளார்.

உக்ரைன் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று கூடியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில், இன்று ஐநா பொதுச்சபை கூடியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என நம்புவதாகவும், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்தது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

பொதுச் சபை கூட்டத்தில் அன்டோனியோ குட்ரஸ் பேசியதாவது- உக்ரைன் நாடு தற்போது பெரும் ஆபத்தை சந்தித்து வருகிறது. இதனால் பிராந்தியத்திலும் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று ரஷ்யா நேற்று கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இதையும் படிங்க - ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதம் பயன்படுத்துவோம் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ரஷ்யாவின் இந்த மிரட்டலை யாரும் நியாயப்படுத்தப்படுத்த முடியாது. மனிதநேய அடிப்படையில் உக்ரைனுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதுமட்டுமே தீர்வாக அமையாது. அமைதி மட்டும்தான் அனைத்து நாடுகளுக்கும் தீர்வாக அமையும்.

உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம் என்று அந்நாட்டு அதிபருக்கு ஐநா உறுதி அளித்துள்ளது. உக்ரைனை கைவிட மாட்டோம். வன்முறையை பரப்பினால் அது மக்களின் உயிரிழப்பில்தான் சென்று முடியும். இதுவரை நடந்ததெல்லாம் போதும். வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்ப வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு பிரச்னை இருக்கிறது என்றால் அதனை தீர்ப்பதற்குத்தான் ஐநா அவை முக்கியத்துவமும் கவனமும் கொடுக்கிறது. அந்த பிரச்னையை எப்படி பெரிதாக்குவது என்று நாங்கள் சிந்திப்பதில்லை. உலகில் மூலை முடுக்கில் எல்லாம் இருக்கும் மக்கள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

உக்ரைனில் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. ரஷ்யா மக்களும் இதனைத்தான் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மிக முக்கியமான பிரச்னை ஏற்படும்போதுதான் ஐநா அவை அவசரமாக கூடும். 1950-ம் ஆண்டில் இருந்து இன்றுடன் சேர்த்து மொத்தமே 11 முறைதான் ஐநா அவை அவசரமாக கூடியுள்ளது. இதில் இருந்து உக்ரைன் பிரச்னைக்கு ஐநா எந்த அளவு முக்கியத்துவம் அளிப்பதை புரிந்து கொள்ளலாம்.

கடைசியாக 1982-ல் ஐநா அவசர கூட்டம் நடைபெற்றது.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine, United Nation

அடுத்த செய்தி