ரத்தம் தோய்ந்த 20 ஆண்டுகால நீண்ட போரை முடித்துக்கொள்கிறோம் - அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இன்னும் எத்தனை காலம் அமெரிக்காவின் மகள்கள் மற்றும் மகன்கள் ஆப்கானிஸ்தானில் போராட வேண்டும். ஆப்கானிஸ்தானே உள்நாட்டு யுத்தம் செய்ய தயாராக இல்லாத போது இன்னும் எத்தனை அமெரிக்க உயிர்களை நாங்கள் கொடுக்க வேண்டும்.

 • Share this:
  ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 18 நிமிடங்கள் உரையாற்றினார். அந்த உரையில் அமெரிக்கா ஆப்கானுக்கு ஏன் வந்தது. வந்ததற்கான நோக்கம் நிறைவேறியதா, ஆப்கானுக்கு அமெரிக்கா என்ன செய்தது இப்போது அங்கிருந்து வெளியேறியது ஏன் என்பது என்ற அம்சங்கள் அவரது உரையில் இடம்பெற்றது.

  மக்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை எனக்கூறி ஆப்கானை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் அந்நாடு அதிபர்

  அஷ்ரப் கனி


  . அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேறிய சில மாதங்களில் தாலிபான்கள் வசம் ஆப்கான் சென்றுவிடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்த நிலையில் எல்லாம் தலைகீழாக மாறியது. அமெரிக்க படைகளை வாபஸ் வாங்குவதாக அமெரிக்க அறிவித்த நிலையிலே ஆட்டத்தை தொடங்கிய தாலிபான்கள் ஆப்கானை முழுமையாக கைப்பற்றிவிட்டனர். ஆப்கானை அமெரிக்கா காக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் அமெரிக்க அதிபரின் உரை முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  ஜோ பைடன்


  வெள்ளைமாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன் “ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து பேச விரும்புகிறேன். நானும் எனது தேசிய பாதுகாப்பு குழுவும் ஆப்கானில் நிலவும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தானுக்கு நாங்கள் ஏன் வந்தோம் அமெரிக்காவின் நலன் என்ன என்பதை இப்போது நினைவூட்டுகிறேன். நாங்கள் தெளிவான இலக்குகளுடன் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் சென்றோம். 2001, செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், மீண்டும் அல் கொய்தா ஆப்கானிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு எவ்வித தாக்குதலையும் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தோம்.

  Also Read:  காபூல் வீதிகள் விசித்திரமா இருக்கு.. சீக்கிரம் தாடி வளரனும். மனைவி, மகள்களுக்கு புர்கா தேடுகிறேன் - காபூல்வாசியின் கண்ணீர்

  நாங்கள் அதை செய்து காட்டியுள்ளோம். ஆப்கானில் அல்கொய்தா அமைப்பை நசுக்கிவிட்டோம். ஒசாமா பின்லேடனுக்கான வேட்டையை நாங்கள் ஒருபோதும் கைவிடவில்லை. அவரை நாங்கள் பிடித்தோம். ஆனால் இதுஎல்லாம் நடந்து ஒரு சகாப்தம் ஆகிவிட்டது. ஆப்கானிஸ்தான் எனும் தேசத்தை மீண்டும் கட்டமைப்பதற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் நோக்கமுமில்லை. எங்கள் நோக்கம் எல்லாம் அமெரிக்கா மீது ஆப்கானில் இருந்து மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்கக்கூடாது. அதனை தடுப்பதே எங்கள் முதன்மை நோக்கம்.  பயங்கரவாத எதிர்ப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என நான் பல ஆண்டுகளாக வாதிட்டு வருகிறேன். கிளர்ச்சி அல்லது தேசத்தை உருவாக்குவது அல்ல. 2009-ல் துணை ஜனாதிபதியாக இருந்தபோதே நான் எதிர்த்தேன். அதனால் தான் நான் அதிபராக இருக்கும்போது நேற்றைய அச்சுறுத்தல்களை விடவும். இன்றைய அச்சுறுத்தல் மீது கவனம் செலுத்துகிறேன்.

  பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது இன்று ஆப்கானிஸ்தானையும் தாண்டி பரந்து விரிந்துள்ளது. சோமாலியாவில் அல் ஷபாப், அரேபியன் தீவில் அல் கொய்தா, சிரியாவில் அல் நுஸ்ரா, ஐஎஸ்ஐஎஸ் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகமாகியிருக்கிறது. ஆசியாவில் ஐஎஸ்ஐஎஸ் துணை அமைப்புகளையும் நிறுவியுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம். இந்த நாடுகளில் எங்களின் நிரந்தர ராணுவ முகாம்களை அமைக்காமலே பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளித்துவருகிறோம். தேவைபட்டால் இனி ஆப்கானிஸ்தானிலும் அதையே செய்வோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நான் அதிபராக பதவியேற்றதும் ஜனாதிபதி ட்ரம்ப் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு ஒப்பந்தத்தை பெற்றேன். அந்த ஒப்பந்தத்தின் படி அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து மே 1, 2021-க்குள் வெளியேறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ட்ரம்ப் நிர்வாகத்தின் போது அமெரிக்கப்படைகள் குறைக்கப்பட்டிருந்தது. ட்ரம்ப் போட்ட ஒப்பந்தத்தின் நீட்சியைத்தான் நான் தற்போது செய்திருக்கிறேன்.

  அமெரிக்கப்படைகள்


  நான் என்னுடைய தீர்க்கமாக நிற்கிறேன். இருபது ஆண்டுகள் கழிந்தபின்னும், அமெரிக்கப்படை ஆப்கானிலிருந்து வெளியேற தக்க தருணம் இல்லை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும், வேகமாக அங்கு சில சம்பவங்கள் அரங்கேறிவிட்டன. அதனால் என்ன நடந்தது. ஆப்கான் அரசியல் தலைவர்கள் அவர்களின் நாட்டை கைவிட்டுவிட்டு ஓடி விட்டனர். ஆப்கானிஸ்தான் ராணுவமே சில நேரங்களின் சண்டையிடவில்லை.

  Also Read:  தாலிபான்கள் என்னை கொல்லப்போகிறார்கள்.. காத்திருக்கிறேன் - ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீர்

  ஆப்கான் படைகளே அவர்களுக்காக போராடத் தயாராக இல்லாத போது அமெரிக்க படைகள் போரில் சண்டையிட்டு போரிலே மடிய தயாராக இல்லை. ஆப்கான் ராணுவத்திற்காக ட்ரில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளோம். 3 லட்சம் ஆப்கான் வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுத்துள்ளோம். தாலிபான்களிடம் இல்லாத கருவிகளை எல்லாம் இவர்களுக்கு கொடுத்துள்ளோம். தாலிபான்களிடம் விமானப்படை கிடையாது. ஆப்கான் வீரர்களுக்கு அதையும் கொடுத்துள்ளோம். எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கினோம். எதிர்காலத்திற்காக போராடுவதற்கான உதவேகத்தை எங்களால் அவர்களுக்கு வழங்கமுடியவில்லை.

  ஆப்கான் படைகளில் சில தைரியமான சிறப்புப்படைகளும் மற்றும் வீரர்களும் உள்ளனர். ஆனால் ஆப்கானால் தாலிபான்களுக்கு எதிராக உண்மையான எதிர்ப்பை ஏற்படுத்தமுடியவில்லை. ஆப்கான் வீரர்கள் தாலிபான்களை இப்போது கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் இன்னும் 20 ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தாலும் அங்கு எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஆப்கான் மக்களை அந்நாடு அரசியல் தலைவர்களால் ஒன்றிணைக்க முடியவில்லை. அவர்கள் மக்கள் மீது அவர்களுக்கே இல்லாத அக்கறை எங்களுக்கு எதற்கு.

  Also Read: தேடப்படும் தீவிரவாதிகள் உள்ளிட்ட 24 இந்தியர்களை சிறையிலிருந்து விடுவித்த தாலிபான்

  நாங்கள் ஆப்கானில் தங்கியிருக்க வேண்டும் என வாதிடுபவர்களை பார்த்து ஒன்றை கேட்கிறேன். இன்னும் எத்தனை காலம் அமெரிக்காவின் மகள்கள் மற்றும் மகன்கள் ஆப்கானிஸ்தானில் போராட வேண்டும். ஆப்கானிஸ்தானே உள்நாட்டு யுத்தம் செய்ய தயாராக இல்லாத போது இன்னும் எத்தனை அமெரிக்கர்களின் உயிர்களை நாங்கள் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் செய்த தவற்றை மீண்டும் செய்யமாட்டேன். அமெரிக்காவின் தேசநலன் இல்லாத ஒரு மோதலில் காலவரையின்றி தங்கி போராடுவது தவறு.

  ஜோ பைடன்


  இந்த தேசத்திற்கு சேவை செய்யும் துணிச்சலான ஆண்களையும் பெண்களையும் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்திருக்க வேண்டிய ஒரு இராணுவ நடவடிக்கையில் மீண்டும் தங்கள் உயிரைப் பணயம் வைக்க நான் அவர்களிடம் கேட்கப் போவதில்லை.நான் இளைஞனாக இருந்தபோது வியட்நாமில் எங்கள் தலைவர்கள் எதைச் செய்தார்களோ. நான் அதை ஆப்கானிஸ்தானில் செய்ய மாட்டேன். இரத்தம் தோய்ந்த அமெரிக்காவின் 20 ஆண்டுகால நீண்ட போரை முடித்துக்கொள்கிறோம்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: