பாகிஸ்தான் பிரதமராக இருந்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையிலேயே கிடைத்திருக்கும் என்று பாகிஸ்தானியர் ஒருவர் பேசிய வீடியோ கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் அங்கே பெரிதளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபரும்,பத்திரிகையாளருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தானில் தற்போதுள்ள பொருளாதார நிலை குறித்து மக்களிடம் கருத்தை பெற்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய நபர் ஒருவர், “இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரியாமலேயே இருந்திருக்கலாம். இஸ்லாமிய நாட்டை பெற்றோம். ஆனால் இஸ்லாம் இங்கு வளரவில்லை. நமக்கு நரேந்திர மோடி போன்ற தலைவர்கள் கிடைத்திருந்தால் நவாஸ் ஷெரீப், பெனசிர் ப்ட்டோ, இம்ரான் கான் போன்ற தலைவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பர்வேஸ் முஷாரப் போன்ற அதிபர்கள் தேவைப்பட்டிருக்கமாட்டார்கள். இந்திய பிரதமர் மோடி தான் சிறந்தவர். அவரை அங்குள்ள மக்கள் மதிக்கிறார்கள்.
பிரதமர் மோடி இங்கு இருந்திருந்தால் மோசமான சக்திகளை விரட்டி அடித்திருப்பார். இந்தியா உலகில் ஐந்தாவது பெரும் பொருளாதார நாடாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் எங்கேயோ உள்ளது.
We don't want Imran Khan or Nawaz Sharif; we just want PM Modi. We pray to Allah to give us Modi to rule Pakistan so that he can straighten out things in this sinking nation. We can't compare ourselves with India. There is no comparison between us: An ordinary Pakistani Citizen pic.twitter.com/edQBmntzuN
— Kushagra Tiwari (@Kushagra_sanjiv) February 23, 2023
பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நாங்கள் தயார். அவர் சிறந்த தலைவர். அவர் மட்டும் இங்கு இருந்திருந்தால், குறைந்த விலையில் தக்காளி, மற்றும் இறைச்சி போன்றவை கிடைத்திருக்கும். எங்களுடைய குழந்தைகள் இரவில் பசியுடன் துாங்க சென்றிருக்க மாட்டார்கள். நரேந்திர மோடி இந்த நாட்டையும் ஆள வேண்டும் கடவுளிடம் என வேண்டிக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Modi, PM Narendra Modi, Viral Video