ஹோம் /நியூஸ் /உலகம் /

எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internation, Indiachinachinachina

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சீன - இந்திய எல்லைப் பகுதியான தவாங்கில் கடந்த 9ஆம் தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் உண்டானது. இதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி இரு நாட்டு கமாண்டர்கள் அளவிலான 17வது சுற்றுப் பேச்சுவார்த்தை சுஷுல்-மால்டோ எல்லையில் நடைபெற்றது.

அதில், மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடிவு எட்டப்பட்டது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியா - சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை விரைவில் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க; அருணாச்சலப் பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப்படை... விரட்டியடித்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீன பத்திரிகையாளர்கள் மத்தியில் இன்று அந்நாட்டு வெளியுறவுத் துறை வாங்க் யீ பேசினார். அப்போது, சீனா மற்றும் இந்தியா என இரு நாடுகளும் ராஜதந்திர மற்றும் ராணுவ வழி தொடர்புகளை பேணி வருகின்றன. இரு நாடுகளும் எல்லையில் அமைதி நிலவ வேண்டுமென உறுதிகொண்டுள்ளன. இரு நாட்டு உறவுகளின் உறுதியான வளர்ச்சியை உறுதிசெய்ய இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இந்திய - சீன படை வீரர்களின் மோதலுக்குப் பிறகு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: China, India