’ஃபேஸ்புக், ட்விட்டர் மீது வழக்கு போட வேண்டும்’- கொந்தளிக்கும் ட்ரம்ப்

'ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய நிறுவனங்கள் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த நிறுவனங்கள்'.

Web Desk | news18
Updated: June 27, 2019, 9:02 PM IST
’ஃபேஸ்புக், ட்விட்டர் மீது வழக்கு போட வேண்டும்’- கொந்தளிக்கும் ட்ரம்ப்
ட்ரம்ப்
Web Desk | news18
Updated: June 27, 2019, 9:02 PM IST
குடியரசுக் கட்சிக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டு வரும் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொந்தளித்துள்ளார்.

அமெரிக்க தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் பங்கெடுத்தார். அப்போது அவர் பேசுகையில், “ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய நிறுவனங்கள் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த நிறுவனங்கள். இதனால்தான் அவை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகவும் குடியரசுக் கட்சிக்கு எதிராகவும் செய்திகளை பரப்புகின்றன” என்றார்.

மேலும், “இதற்காகத்தான் அந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். விரைவில் அதையும் நாங்கள் செய்வோம். குறிப்பாக ட்விட்டரை எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு ட்விட்டரில் அதிகப்படியான ஃபாலோயர்கள் உள்ளன. ஆனால், மேலும் பலரையும் ட்விட்டரில் என்னை பின் தொடரவிடாமல் செய்கின்றனர்” என்றார்.


இதுகுறித்து கூகுள் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “எங்களது தயாரிப்புகள் பயனாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானவை. அனைவருக்குமான தளமான அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ள தளத்தில் எந்தவொரு அரசியல் சார்பு கருத்துகளும் திணிக்கப்படவில்லை. எங்களது செயல்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மை நிறைந்தவையாக உள்ளன” என்றார்.

மேலும் பார்க்க: வருமானம் ஈட்டும் முடிவில் ரயில்வே துறை- சரக்கு ரயில்களில் இனி விளம்பரங்களுக்கு அனுமதி!
First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...