போர் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது! பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இம்ரான் கான்

பாலகோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தான் விமானப்படை இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அதனால், எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

போர் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது! பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இம்ரான் கான்
இம்ரான் கான்
  • News18
  • Last Updated: February 28, 2019, 7:01 AM IST
  • Share this:
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழல் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கவேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப் படை நேற்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அதனால், இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது.


தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானப்படை வீரர், பாகிஸ்தானில் சிக்கியுள்ளார். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்ற பிறகு இந்தியர்களுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். கடந்த பத்து வருடங்களாக பல மருத்துவமனைகளில் இருந்துள்ளேன்.

அப்போது, குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துள்ளேன். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதத்துக்கு பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் எந்த சர்ச்சையும் இல்லை. தற்போதுள்ள சூழல் தீவிரமடைந்து போர் ஏற்பட்டால், என்னுடைய கட்டுப்பாட்டிலோ, நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது.

மோசமான நிகழ்வு நடைபெற்றுவிட்டது. தீவிரவாதம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அப்போதுதான் தக்க சூழலை எட்டமுடியும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading