ஹோம் /நியூஸ் /உலகம் /

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250: உதாரணம் காட்டி பாகிஸ்தானில் விலையை உயர்த்த மக்களிடம் கெஞ்சிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250: உதாரணம் காட்டி பாகிஸ்தானில் விலையை உயர்த்த மக்களிடம் கெஞ்சிய இம்ரான் கான்

இம்ரான் கான்

இம்ரான் கான்

பெட்ரோல் டீசல் விலைகளை அதிகரித்துத்தான் ஆக வேண்டும் மக்களே, இல்லையெனில் நாம் கடனில் மூழ்கிவிடுவோம் மக்களே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கெஞ்சிக்கூத்தாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெட்ரோல் டீசல் விலைகளை அதிகரித்துத்தான் ஆக வேண்டும் மக்களே, இல்லையெனில் நாம் கடனில் மூழ்கிவிடுவோம் மக்களே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கெஞ்சிக்கூத்தாடியுள்ளார்.

மேலும் இந்தியாவில் எரிபொருள் விலைகள் உயர்வை இம்ரான் கான் உதாரணம் காட்டி பாகிஸ்தானிலும் உயர்த்த வேண்டியுள்ளதை வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளை விட பாகிஸ்தானில் தான் பெட்ரோல் டீசல் விலை குறைவு என்று கூறி தயவு செய்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அனுமதி கொடுங்கள் என்று மக்களிடம் கெஞ்சியுள்ளார் இம்ரான் கான்.

“பெட்ரோல் விலைகள் அதிகரித்து விட்டது என்று நீங்கள் கூறினாலும் இதுவும் கூட பாகிஸ்தானில் தான் விலை குறைவு என்று நான் கூறுவேன். விலையை அதிகரிக்க வேண்டும் இல்லை எனில் கடன் அழுத்தம் நம்மை காலி செய்து விடும். இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.250க்கு விற்கப்படுகிறது. பங்களாதேஷில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.200க்கு விற்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானில் நாம் ரூ.138க்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் மதிப்பில் ஒரு ரூபாய் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 44 காசுகள். வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் உள்ளூர் மீடியாக்களின் செய்திகளின் படி பெட்ரோலியம் விலையை பாகிஸ்தான் லிட்டருக்கு ரூ.8.14 என்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலையை ரூ.8.03, ஹை ஸ்பீடு டீசல் விலை ரூ.8.14 என்றும் லிட்டருக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கெரசின் விலை ரூ.6.27-ம், லைட் டீசல் ஆயி விலை ரூ.5.72ம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி கடுமையாக அதிகரித்து வருகிறது 2021-23 ஆகிய 2 ஆண்டுகளில் 51.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இருந்தால் தான் அந்த நாடு கடன்களிலிருந்து வெளியே வர முடியும்.

இந்நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த இந்தியாவை உதாரணம் காட்டி மக்களிடம் கெஞ்சியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இதையும் படிங்க: தீபாவளியன்று ஹேப்பி ஹோலி கூறிய தமாஷ்- கேலிக்கு ஆளான பாகிஸ்தான் நாட்டு மாகாண முதல்வர்

First published:

Tags: Pakistan News in Tamil, Petrol Diesel Price hike