ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
Ukraine President Volodymyr Zelensky | ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டார். அவரது உரைக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கரவொலி எழும்பியது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரித்து அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், ஆரம்பம் முதல் தங்களுக்கு உதவி புரிந்து வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிப் படைகளுக்கு எதிராக இங்கிலாந்து போரிட்டது போல், ரஷ்யப் படைகளை எதிர்த்து உக்ரைன் தற்போது போர் புரிந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டார். அவரது உரைக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கரவொலி எழும்பியது.
இந்நிலையில், உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைப்பதற்கு மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனை தங்களுடன் இணைப்பதற்கு நேட்டோ அமைப்பும் தயாராக இல்லை என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
மேலும் லுஹான்ஸ்க் மற்றும் டோனேட்ஸ்க் ஆகிய பகுதிகளை சமரசம் செய்து கொண்டு ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.