ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் வரும் பயங்கரவாதிகள் ரஷ்யாவுக்கு தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளது. 20 ஆண்டுகால வளர்ச்சியை தாலிபான்கள் பின்னோக்கி இட்டு செல்வார்கள் என பலரும் அஞ்சி வருகின்றனர். அந்நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஈரான்,பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஒருசில நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்களை மத்திய ஆசிய நாடுகளில் குடியமர்த்த வேண்டும் என மேற்கத்திய நாடுகள் யோசனை தெரிவித்துள்ளன.
இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையாக எதிர்த்துள்ளார். “ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வருபவர்களை விசா இல்லாமல் ஏற்க அவர்கள் (மேற்கத்திய நாடுகள்) மறுக்கும் நிலையில், நாங்களும் எங்கள் அண்டை நாடுகளும் விசா இல்லாமல் ஏற்க வேண்டுமா?
மேலும் படிக்க: தாலிபான்கள் கைக்குள் சிக்காத பஞ்ஷிர் பள்ளத்தாக்கு: போருக்கு தயாராகும் வீரர்கள்
பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏன் இத்தகைய அவமானகரமான அணுகுமுறை உள்ளது” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அகதிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்கு வருவதை ஏற்க தயாராக இல்லை என்றும் புதின் தெரிவித்துள்ளார். தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் அரசாக ஏற்க போவதில்லை என கனடா போன்ற நாடுகள் கூறியுள்ள நிலையில், காபூல் நகரை கைப்பற்றிய பின்னர் தாலிபான்களுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க: கைக்குழந்தையை அமெரிக்க வீரர்களிடம் கொடுக்கும் தாய்- கண்கலங்க வைக்கும் காபூல் விமானநிலைய காட்சிகள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.