விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ் விமான மென்பொருளை உருவாக்கியது இந்திய நிறுவனமா?

ஹெச்.சி.எல் நிறுவனம் போயிங் நிறுவனத்திற்காக பணிபுரிவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்

news18
Updated: June 29, 2019, 6:13 PM IST
விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ் விமான மென்பொருளை உருவாக்கியது இந்திய நிறுவனமா?
போயிங்
news18
Updated: June 29, 2019, 6:13 PM IST
எத்தியோப்பியாவுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமான விபத்திற்கு விமானத்தின் சாப்ட்வேர் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அந்த மென்பொருளை உருவாக்கியது இந்தியாவின் ஹெச்.சி.எல் நிறுவனம் தான் என்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங்-க்கு மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனமாக ஹெச்.சி.எல் உள்ளது.

இந்நிலையில் போயிங் நிறுவனத்தின் முன்னாள் மென்பொருள் பொறியாளரான மார்க் ராபின், “போயிங் விமானத்திற்கான மென்பொருளை இந்திய நிறுவனமான ஹெச்.சி.எல் தான் உருவாக்கியது. அதற்காக அந்த நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு 620 ரூபாய் கொடுத்து மென்பொருள் வல்லுநர்களை அவுட்சோர்ஸ் மூலம் பணிக்கு எடுத்துப் பயன்படுத்தியது.


போயிங் நிறுவனம் கொடுத்த குறிப்புகளுக்கு ஹெச்.சி.எல் மென்பொருள் வல்லுநர்கள் கோடிங் எழுதியிருந்தாலும், இதை தற்போது தான் கூற காரணம், போயிங் பொறியாளர்களை விட மிக மோசமான அளவில் தான் ஹெச்.சி.எல் நிறுவன பொறியாளர்கள் மென்பொருள் கோடிங் எழுதினர். எனவே இந்த மென்பொருள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது” என்று அவர் கூறியுள்ளார்.

மார்க் ராபின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹெச்.சி.எல் நிறுவனம், போயிங் நிறுவனத்திற்காக பணிபுரிவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம். ஆனால் தற்போது போயிங் நிறுவனத்தில் நடைபெற்று வரும் 737 மேக்ஸ் விமானங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:

Loading...

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...