2017-ல் ஏலியன் ஷிப் நமது கிரகத்திற்கு வருகை தந்தது: உறுதிப்படுத்தும் ஹார்வர்ட் வானியலாளர்!

58 வயதான லோயப் (Loeb), தனது "வேற்றுக்கிரகம்: பூமிக்கு அப்பால் நுண்ணறிவு வாழ்வின் முதல் அடையாளம்." (Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth) என்ற புத்தகத்தில் 'ஓமுவாமுவா - ஹவாயில் "சாரணர்"' (Oumuamua -- "scout) என்ற பெயரை குறிப்பிட்டிருந்தார்.

58 வயதான லோயப் (Loeb), தனது "வேற்றுக்கிரகம்: பூமிக்கு அப்பால் நுண்ணறிவு வாழ்வின் முதல் அடையாளம்." (Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth) என்ற புத்தகத்தில் 'ஓமுவாமுவா - ஹவாயில் "சாரணர்"' (Oumuamua -- "scout) என்ற பெயரை குறிப்பிட்டிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபத்தில் புகழ்பெற்ற வானியலாளர் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டில் நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாகச் சென்ற ஒரு விண்மீன் பொருளின் மிகவும் அசாதாரண குணாதிசயங்களுக்கான எளிய மற்றும் சிறந்த விளக்கம் அளித்துள்ளார். அது ஒரு ஏலியன் தொழில்நுட்பம் என்று தெரிவித்திருந்தார். இந்த புத்தகத்தை வெளியிட்ட வானியலாளர் லோயப், ஹார்வர்டில் நீண்ட காலமாக வானியல் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் நூற்றுக்கணக்கான முன்னோடி ஆவணங்களை வெளியிட்டுள்ளார். மேலும், மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றியுள்ளனர். 

இந்த நிலையில், அவரது கருத்துக்களை வெளிப்படையாக நிராகரிப்பது கடினம். மேலும் அவர் ஒரு தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், " நாம் தான் தனித்துவமானவர்கள், சிறப்பு வாய்ந்தவர்கள், சலுகை பெற்றவர்கள் என்று நினைப்பது திமிரான விஷயத்திற்கு சமம்" என்று அவர் அந்த வீடியோ அழைப்பில் கூறியுள்ளார். மேலும் "சரியான அணுகுமுறை அடக்கமாக இருக்க வேண்டும்: 'நாம் மட்டும் சிறப்பு இல்லை, வான்வெளியில் வேறு பல கலாச்சாரங்களும் உள்ளன. அவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார். 

ஏலியன் வருகை உண்மையா?

58 வயதான லோயப் (Loeb), தனது "வேற்றுக்கிரகம்: பூமிக்கு அப்பால் நுண்ணறிவு வாழ்வின் முதல் அடையாளம்." (Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth) என்ற புத்தகத்தில் 'ஓமுவாமுவா - ஹவாயில் "சாரணர்"' (Oumuamua -- "scout) என்ற பெயரை குறிப்பிட்டிருந்தார். இதன் பொருள் விண்வெளியில் ஏலியன் தோற்றத்தை குறிக்கிறது. உண்மை என்னெவென்றால், கடந்த 2017 அக்டோபர் மாதம், சூரிய மண்டத்தில் ஒரு பொருள் மிக விரைவாக நகர்வதை வானியலாளர்கள் கவனித்தனர். அது மற்றொரு நட்சத்திரத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும் எனவும் அது விண்மீன் இன்டர்லோபர் எனவும் முதலில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அது அவர்களுக்கு ஒரு சாதாரண பாறையாக தெரியவில்லை. 

ஏனென்றால் சூரியனைச் சுற்றி ஸ்லிங்ஷாட் செய்தபின், அது ஒரு மர்ம சக்தியால் செலுத்தப்பட்டு எதிர்பார்த்த பாதையில் வேகமாகச் சென்று மறைந்தது தெரியவந்தது. பொதுவாக, வால்மீன் வெளியேற்றும் வாயு மற்றும் குப்பைகள் என்றால் இதை எளிதாக விளக்க முடியும். அந்த குறிப்பிட்ட பொருள் விண்மீன் திரளில் இருந்து வெளியேற்றப்பட்ட வாயு  என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும் அந்த பொருள் ஒரு விசித்திரமான வழியில்  வீழ்ச்சியடைந்தது. மேலும், விஞ்ஞானிகளின் தொலைநோக்கிகளில் இது எவ்வாறு பிரகாசமாகவும் மங்கலாகவும் ஆனது என்பதைக் கருத்தில் கொண்டு, அது ஒரு பிரகாசமான உலோகத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்று அவர்கள் கணித்துள்ளனர். 

என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு, வானியலாளர்கள் புதிய கோட்பாடுகளைக் கொண்டு வர வேண்டியிருந்தது. இது ஹைட்ரஜன் பனியால் ஆனது, எனவே புலப்படும் தடங்கள் இருக்காது. அல்லது அது ஒரு தூசி மேகமாக சிதைந்தது என சில கோட்பாடுகளை வரையறுக்கத் தொடங்கினர். ஆனால், "ஓமுவாமுவாவின் குறிப்பிட்ட பண்புகளை விளக்குவதற்கு வந்த இந்த யோசனைகள் எப்போதும் நாம் முன்னர் பார்த்திராத ஒன்றை உள்ளடியிருந்தது" என்று லோயப் கூறினார். அதை ஏன் நாம் செயற்கை தோற்றமாக சித்திக்க கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள அவர், அது ஒரு ஏலியன் ஷிப்பாக கூட இருக்கலாம் என வாதிட்டார்.

ஏலியன் ஷிப்பின் வடிவத்தை விளக்கிய வானியலாளர்:

ஓமுவாமுவா அதன் சுருக்கமான தோன்றலின் போது ஒருபோதும் நெருக்கமாக புகைப்படம் எடுக்கப்படவில்லை. அப்படி ஒரு பொருள் இருந்ததை, அது ஏற்கனவே நமது சூரிய மண்டலத்திலிருந்து வெளியேறும் போது மட்டுமே வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்போது கவனிக்கப்பட்டதை வைத்து அந்த பொருள் தனித்தன்மையுடன் பொருந்தக்கூடிய இரண்டு வடிவங்களை பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் ஒன்று ஒரு சுருட்டு போன்ற நீண்ட மற்றும் மெல்லிய வடிவம்.

Also read... கடன்கொடுக்கும் 1,509 ஆன்லைன் செயலிகள் மீது ரிசர்வ் வங்கியிடம் குவிந்துள்ள புகார்கள்...

மற்றொன்று தட்டையான மற்றும் ஒரு பன்கேக்கைப் போன்ற வட்டமான வடிவமாக இருக்கலாம் என கணித்துள்ளனர். மேலும் இந்த பொருள் நட்சத்திர கதிர்வீச்சினால் இயக்கப்படும் ஒரு ஒளிப் பயணமாக வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மற்றொரு விந்தையானது அந்த குறிப்பிட்ட பொருள் நகர்த்தப்பட்ட விதம். "ஒருவேளை 'ஓமுவாமுவா' பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தில் ஓய்வெடுக்கும் ஒரு மிதவைப் போல இருந்திருக்கலாம்" என்று லோயப் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லோயப் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் சக வானியலாளர்கள்:

லோய்பின் கருத்துக்கள் சக வானியலாளர்களுடன் முரண்பட்டு காணப்படுகின்றன. இது குறித்து வானியற்பியல் விஞ்ஞானி ஈதன் சீகல், லோயிப்பை ஒருகாலத்தில் மரியாதைக்குரிய விஞ்ஞானி என்று அழைத்தார். அவர் தனது வாதங்கள் மூலம் தனது சகாக்களை நம்ப வைக்கத் தவறியதால், பொதுமக்களிடம் அவதூறு கருத்துக்களை பதிய வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: