உலகம் மிக ஆபத்தான கால கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஒமைக்ரான் அதிகரிப்பு இன்னும் அதிக ஆபத்தான உருமாறிய வைரஸ்களை உருவாக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்திருந்த சூழலில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க : கொரோனாவால் 3 பேர் பாதிப்பு - 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு போட்ட சீனா!
மீண்டும் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒமைக்ரான் பரவல் வல்லரசு நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா மற்றும் அதன் வேரியன்ட்டுகளை உன்னிப்பாக கவனித்து வரும் உலக சுகாதார நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருப்பது அச்சத்தை அளிப்பதாக உள்ளது. ஏனென்றால் ஒமைக்ரான் பரவல், இன்னும் ஆபத்தான வேரியன்ட்களை உருவாக்கி விடக்கூடாது. ஒமைக்ரான் என்பது இன்றைய சூழலில் மிக ஆபத்தான வைரஸ். அது உயிரிழப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.
இதையும் படிங்க : 10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா
உலகம் இப்போது மிக மோசமான கால கட்டத்தில் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது என்ன மாதிரியான விளைவை அடுத்து வரும் நாட்களில் ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்படவில்லை.
பரவல் இன்னும் அதிகரிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் நிச்சயம் தேவைப்படும். அவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது நிச்சயம் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக மாறி விடும்.
மிகவும் தரமான சுகாதார கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளே, கொரோனா பாதிப்பால் ஆட்டம் கண்டன. அப்படியிருக்கையில் மற்ற நாடுகளும் கொரோனாவை மிக முக்கிய பிரச்னையாக கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனாவை ஒழிப்பதில் தனி நபர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் நேற்று, ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. பாதிக்கப்பட்டோரை கவனிக்க போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் தொற்று ஏற்பட்டவர்கள் அவதிக்குள்ளாகினர்.
Also read: 10 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா; 2,000ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை - அலறும் அமெரிக்கா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Omicron Symptoms, WHO