குடியிருப்பு பகுதியை சூழ்ந்த கரும்புகை கூட்டம்; பாகிஸ்தான் விமான விபத்தின் காட்சிகள்

விமானம் 2 அல்லது 3 முறை தரையிறங்க முயற்சித்து வானில் வட்டமடித்ததாகவும், அதன் பின்பே இந்த துயர சம்பவம் நடந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த கரும்புகை கூட்டம்; பாகிஸ்தான் விமான விபத்தின் காட்சிகள்
விமான விபத்து
  • Share this:
பாகிஸ்தானில் 107 பேருடன் லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்றுகொண்டிருந்த விமானம், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

கொரோனா காரணமாக விமான சேவைகளை ரத்து செய்திருந்த பாகிஸ்தான் அரசு, கடந்த 16-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது.

அதில் 99 பயணிகளும், 8 விமான ஊழியர்களும் பயணித்தனர். கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம், மூன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதியான மாடல் காலணியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
விமானம் 2 அல்லது 3 முறை தரையிறங்க முயற்சித்து வானில் வட்டமடித்ததாகவும், அதன் பின்பே இந்த துயர சம்பவம் நடந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீயை அணைக்கும் பணிகளிலும், நொறுங்கிய விமானம் மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்ததாக டிவீட் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டதாக தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள இம்ரான் கான், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

லாகூரில் இருந்து கராச்சிக்கு ஒன்றரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய விமானம், கோர விபத்தில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading