இன்று மட்டுமே தெரியும் 2019-ம் ஆண்டின் ‘சூப்பர் மூன்’!

2019-ம் ஆண்டின் மிகவும் பெரிதான, வெளிச்சமான நிலவு இன்று மட்டுமே பூமியில் உள்ளவர்களுக்குத் தென்படும். (Representative Image: AFP)

வழக்கத்துக்கு மாறாக பூமியிலிருந்து பார்க்கப்படும் நிலவின் அளவு 15 முதல் 30 சதவிகிதம் பெரிதாக இன்று தெரியும் என்கின்றனர் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2019-ம் ஆண்டின் மிகவும் பெரிதான, வெளிச்சமான நிலவு இன்று மட்டுமே பூமியில் உள்ளவர்களுக்குத் தென்படும்.

அமெரிக்காவில் இன்று தெரியும் நிலவை ‘சூப்பர் ஸ்னோ மூன்’ என்று அழைக்கின்றனர். அமெரிக்காவில் இது பனிக்காலம் என்பதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. வழக்கத்துக்கு மாறாக பூமியிலிருந்து பார்க்கப்படும் நிலவின் அளவு 15 முதல் 30 சதவிகிதம் பெரிதாக இன்று தெரியும் என்கின்றனர் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த சூப்பர் நிலவை பூமியில் உள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் காண முடியும். குறிப்பாக இந்தியாவில் உள்ள அத்தனை நகரங்களிலிருந்தும் வெறும் கண்களாலே இன்று நிலவைப் பார்க்க முடியும். பிப்ரவரி 19-ம் தேதியான இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் சூப்பர் நிலவை மிகவும் பெரிதாகக் காண முடியும்.

இதேபோல், அதிகாலையில் நிலவு மறையும் நேரத்திலும் சூப்பர் நிலவின் தோற்றம் மிகவும் அழகானதாகத் தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: அதிமுக - பாமக கூட்டணி எப்படி உண்டானது.. பிண்னனி என்ன?
Published by:Rahini M
First published: