ஹோம் /நியூஸ் /உலகம் /

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடிய போது பள்ளத்தில் விழுந்த பெண்கள்- வைரலாகும் வீடியோ

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆடிய போது பள்ளத்தில் விழுந்த பெண்கள்- வைரலாகும் வீடியோ

பிறந்தநாள் கொண்டாடத்தின் போது திடீர் பள்ளத்தில் விழுந்த பெண்கள்

பிறந்தநாள் கொண்டாடத்தின் போது திடீர் பள்ளத்தில் விழுந்த பெண்கள்

அங்கிருந்த வடிகால் அமைப்புக்காக தோண்டப்பட்ட குழி மேல் போடப்பட்ட தளம் பலவீனமாக இருந்ததால் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaBraila Braila

  பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் மகிழ்ச்சியாக பெண்கள் நடனமாடிய போது அவர்கள் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சி காணொளி வைராலாகி வருகிறது. இந்த சம்பவம் பிரேசில் நாட்டின் அலோகோயின்ஹாஸ் நகரில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

  இந்த பகுதியில் உள்ள 38 வயதான கேப்ரிலா கார்வல்ஹோ என்ற பெண் தனது சக நண்பரின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இந்த தோழிகள் ஏழு பேரும் சுற்றி நின்று கொண்டு வட்டமிட்டு அணைத்துக்கொண்டு Tem Cabaré Essa Noite என்ற போர்த்துகீசிய பாடலுக்கு ஆட்டம் ஆடியுள்ளனர். அப்போது தான் அவர்கள் கீழ் இருந்த தரையில் தீடீர் பள்ளம் உருவாகி அதில் ஏழு பேரும் தவறி பள்ளத்திற்குள் விழுந்துள்ளனர்.

  இந்த சம்பவத்தை அருகே இருந்த நபர் வீடியோ எடுத்த நிலையில், அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கீழே விழுந்த ஏழு பெண்களையும் சுற்றி இருந்த நண்பர்கள் உடனடியாக கை பிடித்து தூக்கி ஒரு வழியாக மீட்டுள்ளனர்.

  இது அங்கிருந்த வடிகால் அமைப்புக்காக தோண்டப்பட்ட குழி எனவும், அதன் மேல் போடப்பட்ட தளம் பலவீனமாக இருந்ததால் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. நல்ல வேளையாக யாருக்கும் இதில் பெரும் பாதிப்பு ஏற்படாத நிலையில், இந்த குழியை உடனடியாக ஊழியர்கள் சீரமைத்தனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Birthday, Brazil, Viral Video