நீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் ட்ரிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்!

நீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் ட்ரிக்ஸ்... கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்!

கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து மெஜிசியன்

நீருக்கடியில் 3 நிமிடங்களில் 20 மேஜிக் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மெஜிசியன் மார்ட்டின் ரீஸ்.

  • Share this:
மார்ட்டின் ரீஸ் என்பவர் மாய வித்தைகளைச் செய்துகாட்டும் ஒரு மெஜிசியன் ஆவார். இவர் மூன்றே நிமிடங்களில் 20 மேஜிக் தந்திரங்களை நீருக்கடியில் செய்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரை சேர்ந்த மார்ட்டின், பைன்வுட் ஸ்டுடியோ எனும் இடத்திலுள்ள நீர் நிரப்பப்பட்ட குளத்திற்குள் சென்று இதற்கு முன்னதாக நிகழ்த்திய அனைத்து பதிவுகளையும் முறியடிக்கும் மேஜிக்கை செய்துகாட்டியுள்ளார்.

அவர் மேஜிக் செய்யும் வீடியோ கின்னஸ் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, இதுவரை 1.3k க்கும் மேற்பட்ட லைக்குகளையும், நெட்டிசன்களிடமிருந்து டன் கணக்கில் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் மார்ட்டின். டைம்ஸ் நவ் இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ட்டின் தனது குழந்தைப் பருவத்தில் நீரில் மூழ்கிவிடும் நிலையிலிருந்து மீண்டதால், நீருக்கடியில் இருப்பது குறித்த தன் பயத்தை முறியடிப்பதற்காகவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

அதேபோல, மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்குகளை வழங்குவதற்காக ’ஸ்ப்ரெட் எ ஸ்மைல்’ என்ற தொண்டு நிறுவனத்துடன் அவர் செய்யும் வேலை, இந்த சாதனையைப் புரிய அவரை மேலும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூறுகையில், இந்த சாதனையை தன்னை ஊக்குவித்த ஸ்ப்ரெட் எ ஸ்மைலின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அர்பணிப்பதாக தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அந்த குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை என்பதால், மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக வாராந்திர ஆன்லைன் நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வருகிறார்.

Also see: நிவரின் துயரம் - புயல் கற்றுத் தந்தது என்ன?

மார்ட்டின் அந்த குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதையே இது காட்டுகிறது. மேஜிக் செய்யும்போது அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பேசுகையில், "தண்ணீர் எந்த இயக்கத்தையும் மெதுவாக்குகிறது, கண்களை விட விரைவாக நகரும் கைகளை மட்டுமே நான் நம்பியிருப்பதால் அது கடினமாக இருந்தது" எனக் கூறியுள்ளார். இவர் ஒன்றும் முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.

இதற்கு முன்னதாக ஒரு நிமிடத்தில் 18 வகையான மேஜிக் ட்ரிக்ஸ்களை நிகழ்த்தியுள்ளார். அதேபோல ஒரே ஸ்கைடைவ்வில் நிகழ்த்தப்பட்ட 11 வகையான மேஜிக் ட்ரிக்ஸ், ஒரு நிமிடத்தில் கண்ணை மூடிக்கொண்டு நிகழ்த்திய 24 விதமான மேஜிக் ட்ரிக்ஸ் மற்றும் மூன்று நிமிடங்களில் காற்று சுரங்கப்பாதையில் பல மேஜிக்குகள் என பலவற்றை நிகழ்த்தியுள்ளார். தற்போது அவர் நிகழ்த்தியுள்ள சாதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: