• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சிறையில் இருந்து படம் பார்க்க வேண்டும் - நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு

சிறையில் இருந்து படம் பார்க்க வேண்டும் - நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

அமெரிக்காவின் கன்ஸாஸ், மிஸ்ஸவுரி ஆகிய மாநிலங்களில் மான்கள் வேட்டையாடப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவின் மிஸ்ஸவுரி மாநிலத்தில் மானை கொன்றவருக்கு, ஓராண்டு சிறையில் இருந்து பாம்பி என்ற படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் மிஸ்ஸவுரி மாநிலத்தில் 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மான்களை வேட்டையாடி கொன்றதாக பெர்ரி மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த நீதிபதி, ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், சிறையில் இருந்து ‘பாம்பி’ என்ற படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கோப்புப்படம்


1942-ம் ஆண்டு வெளியான பாம்பி என்ற அனிமேஷன் திரைப்படம் மானின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. சிறந்த 25 ஹாரர் படத்தில் இந்தப்படமும் ஒன்று என டைம் இதழ் கூறியிருந்தது.

அமெரிக்காவின் கன்ஸாஸ், மிஸ்ஸவுரி ஆகிய மாநிலங்களில் மான்கள் வேட்டையாடப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: